» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதல்வர் விஜய் துறையில் டெண்டர் முறைகேடுகள்! — தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரன் பேட்டி!
புதன் 19, ஆகஸ்ட் 2026 7:55:05 AM (IST)
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் குறிப்பாக முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் உள்ள துறையிலும் பெருமளவில் டெண்டர் முறைகேடுகள் நடந்துள்ளன என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் "கர்நாடகாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அம்மாநில அரசிற்கும் அதன் முதலமைச்சருக்கும் பாஜக சார்பில் எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு மனிதனின் உயிரைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை.தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஏற்கனவே தங்களது வழக்கமான 'வேலையை'த் தொடங்கிவிட்டனர். அவர்கள் யார், யார், எந்தெந்த இடங்களில் கமிஷன், லஞ்சம் வாங்குகிறார்கள் என்பது பற்றிய முழுமையான பட்டியல் பாஜகவிடம் உள்ளது.
தமிழக முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள துறையிலும் பெருமளவில் டெண்டர் முறைகேடுகள் நடந்துள்ளன. இது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் விரைவில் மக்கள் மன்றத்தில் பாஜக வெளிக்கொண்டு வரும். தமிழகத்தில் ஆட்சியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் ஆட்சி என்பது மக்களுக்குப் பயனுள்ளதாக இல்லாமல், மிகுந்த வேதனையான நாட்களாகவே அமைந்துள்ளன" என்றும் சாடினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விக்சித் பாரத் 2047: கோவையைச் சேர்ந்த பெண் மருத்துவர் உருவாக்கிய கல்விக்கொடி & லோகோ!
சனி 22, ஆகஸ்ட் 2026 5:03:37 PM (IST)

மகனின் நினைவாக மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடத்திய தந்தையின் நெகிழ்ச்சி செயல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:43:30 PM (IST)

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)

திமுகவில் கிளை முதல் மாவட்டம் வரை அதிரடி மாற்றங்கள்: செயற்குழுவில் 9 தீர்மானங்கள்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:17:14 PM (IST)

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி : தலைமை காவலர் உள்பட 2பேர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:31:58 AM (IST)

மணல் திட்டில் கார் மோதி விபத்து: 6 பேர் காயம்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:19:18 AM (IST)



யாருAug 19, 2026 - 09:09:31 AM | Posted IP 162.1*****