» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போலி ஆவணங்களைத் தயாரித்து பத்திரப்பதிவு: சார்பதிவாளர் மீது வழக்கு - 2 பெண்கள் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:35:26 AM (IST)
நெல்லையில் போலி ஆவணங்களைத் தயாரித்து முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இம்மோசடிக்கு உடந்தையாக இருந்த 2 பெண்கள் கைதாகியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் அருகே உள்ள ராஜபதி கீழத் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன்; இவரது மனைவி பூரண செல்வி (33). பூரண செல்வியின் தந்தை சங்கரனுக்குச் சித்தார்த்சத்திரம் கிராமத்தில் சொந்தமாக நிலம் இருந்தது. சங்கரனுக்கு இரண்டு மனைவிகள். அதில் ஒரு மனைவியான பூரண செல்வி தவிர, பகவதி (42), சீதாலட்சுமி (47) ஆகிய மகள்களும் உள்ளனர்.
சங்கரன் மறைவுக்குப் பிறகு, சொத்துப் பங்கீட்டில் தன்னிடம் கேட்காமல் பகவதி மற்றும் சீதாலட்சுமி ஆகியோரை மட்டும் கொண்டு சொத்துக்களைப் பங்கீடு செய்யக் கூடாது என பூரண செல்வி கங்கைகொண்டான் சார்பதிவாளர் தங்கபாண்டியனிடம் மனு அளித்திருந்தார்.
ஆனால், சார்பதிவாளர் தங்கபாண்டியன் அம்மனுவை மறைத்துவிட்டு, பகவதி மற்றும் சீதாலட்சுமி தரப்பினருக்கு ஆதரவாகப் போலியான ஆவணங்களைத் தயாரித்து நிலத்தைப் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.
இம்மோசடி குறித்துத் தெரிந்த பூரண செல்வி, நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, விதிகளை மீறி சொத்தை மோசடி செய்தல், போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் சார்பதிவாளர் தங்கபாண்டியன், தாழையூத்து யாதவர் தெருவைச் சேர்ந்த பகவதி (42) மற்றும் செங்குளம் நடுத்தெருவைச் சேர்ந்த சீதாலட்சுமி (47) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் பகவதி மற்றும் சீதாலட்சுமி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 3 பேர் பரிதாப பலி - ஒருவர் படுகாயம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:36:33 PM (IST)

தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:08:30 PM (IST)

ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: நெல்லை மாநகர காவல் துணை ஆணையராக ரமேஷ் பாபு நியமனம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:49:27 AM (IST)

கோவையில் கல்லூரி மாணவர் கொலைக்கான காரணம் என்ன? காவல்துறை அறிக்கை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:41:50 AM (IST)


