» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் பண மோசடி வழக்கு: 2 இளம்பெண்கள் அதிரடி கைது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:37:00 AM (IST)

தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.5 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு இளம்பெண்களை நெல்லை சந்திப்புப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லைப் பகுதியில் இயங்கி வந்த ஒரு தனியார் நிறுவனத்தில் ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால், மாதம் தோறும் லட்சக்கணக்கில் அதிக வருமானம் ஈட்டலாம் எனக்கூறிப் பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால், வாக்குறுதி அளித்தபடி வருமானம் தராமலும், முதலீடு செய்த பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றியதாகப் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இப்புகாரின் பேரில் நெல்லை சந்திப்புப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பண மோசடியில் ஈடுபட்டது திருநெல்வேலி அருகே உள்ள காரையிருப்புப் பகுதியைச் சேர்ந்த சண்முகலட்சுமி (23) மற்றும் பூரணசெல்வி (30) என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, 2 இளம்பெண்களையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் மேலும் பலரிடம் இதுபோன்று மோசடி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கர்நாடக வனத்துறைக்கு முதல்வர் விஜய் கடும் கண்டனம்: உயர்மட்ட விசாரணை நடத்த வலியுறுத்தல்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:40:55 PM (IST)

ஆன்மா அமைப்பின் 27-ஆம் ஆண்டு தொடக்க விழா : ரூ.1.82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:16:08 PM (IST)

கல்வி நிறுவனங்களில் போதைப்பொருட்களை ஒழிக்க ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்: எஸ்பி வேண்டுகோள்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 5:43:13 PM (IST)

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது மட்டுமே தவெக ஆட்சியின் 100 நாள் சாதனை: இபிஎஸ் விமர்சனம்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 4:40:26 PM (IST)

பதிவுத்துறையில் ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம் : தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 3:51:48 PM (IST)

அமைச்சர் பேசியதற்கு மன்னிப்பு காேரிய முதல்வர் விஜய் : சட்டப்பேரவையில் பரபரப்பு!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 3:20:18 PM (IST)


