» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உப்பு நிறுவன கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி - தூத்துக்குடி அருகே சோகம்!
சனி 25, ஜூலை 2026 10:45:32 AM (IST)
தூத்துக்குடி அருகே உப்பு நிறுவனத்தில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை திரவிய லிங்கேஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தனம் மகன் அழகேந்திரன் (34). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. இவர் கோவங்காடு அருகே உள்ள பழையகாயலைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான உப்பு நிறுவனத்தில், கடந்த திங்கட்கிழமை முதல் தனது 5 நண்பர்களுடன் தங்கி ஆஸ்பெஸ்டாஸ் கூரை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், அழகேந்திரன் கம்பி வழியே மேலே ஏற முயன்றபோது எதிர்பாராத விதமாகச் கால்தவறி சுமார் 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, உடனிருந்தவர்கள் மீட்டுத் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டில் பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது; மீறினால் அபராதம்: உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:52:31 PM (IST)

எட்டயபுரம் அருகே 15 ஆண்டுகளாகக் குடிநீரின்றித் தவிக்கும் கிராம மக்கள்: அதிகாரிகள் அலட்சியம்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:41:01 PM (IST)

மாற்றுக் கட்சியிலிருந்து இணைந்த நிர்வாகிகளுக்கு தவெகவில் முக்கியப் பொறுப்புகள்: விஜய் அறிவிப்பு
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:12:06 PM (IST)

அதிக மதிப்புள்ள கனிமங்களுக்குக் கூடுதல் கட்டணம் செலுத்தி விற்பனை: புதிய அரசாணை வெளியீடு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:04:00 PM (IST)

பாளை., சிறைக்குச் சென்ற கனிமொழி எம்.பி.! - மார்க்கண்டேயன் எம்எல்ஏவுடன் நேரில் சந்திப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:49:01 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி பட்டாசு திருட்டு வழக்கு : த.வெ.க. வழக்கறிஞர் அணி நிர்வாகி உள்பட 6 பேர் கைது!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:17:39 PM (IST)


