» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சாலையில் நடந்து சென்ற பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபர் கைது!
வியாழன் 16, ஜூலை 2026 8:00:31 AM (IST)
கயத்தாறு அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணைத் தாக்கி, முட்புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கூலித் தொழிலாளியைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் அஜித்குமார் (26), கூலித் தொழிலாளி. இவர் நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சுங்கச்சாவடி பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கோபாலபுரத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அகிலாண்டபுரம் பகுதியில் சென்றபோது, அந்தச் சாலையில் நடந்து வந்த பெண்ணைச் சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டுத் தாக்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் கீழே விழுந்தவுடன், அருகில் இருந்த முட்புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டுப் பொதுமக்கள் அந்தப் பகுதிக்குத் திரண்டு வந்ததால், அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடினார்.
பொதுமக்கள் மீட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, அகிலாண்டபுரம், சுங்கச்சாவடி மற்றும் நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதன் அடிப்படையில் பதுங்கி இருந்த அஜித்குமாரைக் கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காந்திராஜா தலைமையிலான போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட அஜித்குமார் ஏற்கனவே ஒரு பெண்ணைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வருடாந்திர நிகர லாபம் ரூ.1,337.55 கோடியாக உயர்வு: நிதிநிலை அறிக்கை வெளியீடு!
வியாழன் 16, ஜூலை 2026 5:17:04 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சிப் பொறுப்புகள் பறிப்பு: இபிஎஸ் அதிரடி!
வியாழன் 16, ஜூலை 2026 3:16:27 PM (IST)

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு: வாட்ஸ்-அப் மூலம் புகார் அளிக்க புதிய எண் அறிவிப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 12:21:22 PM (IST)

கும்பகோணம் பள்ளித் தீ விபத்தின் 22-ஆம் ஆண்டு நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி!
வியாழன் 16, ஜூலை 2026 11:38:11 AM (IST)

கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: தம்பதி பலி!
வியாழன் 16, ஜூலை 2026 8:46:32 AM (IST)


