» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாடு மாடல் வாஷிங் மெஷின் குட்கா கறைகளைக் கூட நீக்குமா? - கனிமொழி கேள்வி!

வியாழன் 2, ஜூலை 2026 11:01:55 AM (IST)

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக வெளியாகி வரும் தகவல்களுக்கு மத்தியில், தவெக-வை விமர்சித்து திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியல் சூழலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து விலகிப் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, இன்று மாமல்லபுரத்தில் நடைபெறும் பிரம்மாண்ட இணைப்பு விழாவில், அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் த.வெ.க.வில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது கடந்த காலங்களில் குட்கா விவகாரம் தொடர்பாகப் பல்வேறு புகார்களும் விசாரணைகளும் நடைபெற்று வந்த பின்னணியைக் குறிப்பிட்டு, திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் காரசாரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "வட மாநிலங்களில் பாஜக பயன்படுத்தி வந்ததைப் போன்ற 'வாஷிங் மெஷின்' ஒன்று, தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். இந்த புது தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கறைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே... உண்மையா?" எனத் தவெக-வின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் குத்தலாகக் கேள்வி எழுப்பியுள்ளார். மாமல்லபுரம் விழா நடைபெறும் இதே நாளில் கனிமொழி விடுத்துள்ள அறிக்கை தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.


மக்கள் கருத்து

ஏம்பாJul 2, 2026 - 12:11:05 PM | Posted IP 172.7*****

ஒங்க கட்சியில் திருடன் வேலு, மூத்திர செந்தில் பாலாஜி,....போன்ற திருடர்கள் இல்லையாமா? கண்ணகி என்னமா இப்படி?

மக்கள்Jul 2, 2026 - 12:00:27 PM | Posted IP 172.7*****

குடும்பங்கள் எல்லாம் சாராய ஆலைகளை நடத்திட்டு பேச்சை பாருங்க.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory