» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி - சென்னை வந்தே பாரத் ரயில் சேவை: மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் கோரிக்கை!
ஞாயிறு 28, ஜூன் 2026 1:12:12 PM (IST)

தூத்துக்குடி - சென்னை வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்க மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் பாஜகவினர் கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் மற்றும் ஆன்மீகச் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் புதிய ரயில் சேவைகளைத் தொடங்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அம்மனுவில், திருச்செந்தூருக்கு இயக்கப்படும் ரயில்களின் பராமரிப்புப் பணிகளுக்காக அவற்றை தற்போதைய நடைமுறைப்படி திருநெல்வேலிக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளதால் தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆறுமுகநேரி ரயில் நிலையத்தில் ஏற்கனவே போதிய தண்டவாள வசதிகள் இருப்பதால், அங்குப் புதிய பிட் லைன் (Bit Line) வசதி அமைக்கப்பட்டால் ரயில்களை அங்கேயே பராமரிக்க முடியும் என்றும், இது திருச்செந்தூருக்குக் கூடுதல் ரயில்களை இயக்குவதற்கு வழிவகுக்கும் என்றும் சித்ராங்கதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குத் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் தென்மாவட்ட மக்களின் பயணத் தேவையைத் தீர்க்கச் சென்னையிலிருந்து திருச்செந்தூருக்குப் புதிய நேரடி ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தற்போது திருநெல்வேலி - மும்பை இடையே இயக்கப்பட்டு வரும் சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலைத் திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும் என்றும், தூத்துக்குடி – சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை உடனடியாகத் தொடங்க மத்திய ரயில்வே அமைச்சகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற மத்திய அமைச்சரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
நிகழ்வின் போது வர்த்தகப் பிரிவு மாநிலத் தலைவர் சதீஷ் ராஜா, மாவட்டப் பொதுச் செயலாளர்கள் ஆறுமுகம், செல்வராஜ், மாவட்டத் துணைத் தலைவர் சிவராமன், திருச்செந்தூர் மண்டல் தலைவர் செல்வகுமரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மக்கள்Jun 28, 2026 - 06:33:12 PM | Posted IP 104.2*****
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் தூத்துக்குடி ரயில்வே ஸ்டேஷன் ரோடு திணறுகிறது இதற்கு மாற்று வழியாக பழைய மாநகராட்சி வடபுற கிழமேல் ரோட்டில் வடபுறத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷனுக்கு சொந்தமான 300 அடி நீள காம்பவுண்ட் சுவரை அகற்றி பெரிய நுழைவு வாயிலுடன் இருவழி சாலையாக அமைக்க வேண்டும் இது குறித்து தொகுதி mpயும் முன்னாள் அமைச்சரும் mlaக்களும் மேயர் ஆணையர் மற்றும் ரயில்வே அதிகாரிகளும் பயணிகள் நல சங்கமும் எந்த முன் முயற்சியும் எடுக்கவில்லை தற்போதைய தவெக அமைச்சர் ஶ்ரீநாத்தாவது புதிய நுழைவாயிலை கட்டி சாலை அமைத்ததால் 2029 தேர்தலில் தவெக தூத்துக்குடி MP யை கைப்பற்றும் செய்வீர்களா மக்கள் பிரதிநிதிகளே அதிகாரிகளே
மேலும் தொடரும் செய்திகள்

இபிஎஸ் தலைமையில் அதிமுக தள்ளாடுகிறது: தவெகவில் இணைந்த விஜய பாஸ்கர் பேட்டி
வியாழன் 2, ஜூலை 2026 5:06:22 PM (IST)

திருச்செந்தூரில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 2, ஜூலை 2026 4:14:27 PM (IST)

வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் மீண்டும் பெரிய ஓட்டை: வாகன ஓட்டிகள் அச்சம்!
வியாழன் 2, ஜூலை 2026 3:24:31 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பண ராஜவேல் பொறுப்பேற்பு!
வியாழன் 2, ஜூலை 2026 12:34:29 PM (IST)

தவெக ஆட்சியைத் தரைமட்டமாக்க திமுக சதி : ஸ்டாலின் மீது சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!
வியாழன் 2, ஜூலை 2026 12:23:48 PM (IST)

ஸ்பா சென்டர் நடத்த ரூ.20,000 மாமூல் வாங்கிய 2 பெண் போலீஸ் அதிகாரிகள் அதிரடி கைது!
வியாழன் 2, ஜூலை 2026 12:13:36 PM (IST)



மோடி பக்தன்Jun 28, 2026 - 09:04:01 PM | Posted IP 104.2*****