» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆசிரியை தற்கொலை முயற்சி: குருவானவரை மாற்றக் கோரிப் பெண்கள் திரண்டு முற்றுகைப் போராட்டம்!
ஞாயிறு 28, ஜூன் 2026 10:48:36 AM (IST)

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் அமைந்துள்ள சிஎஸ்ஐ திருச்சபைக்குச் சொந்தமான தூய இம்மானுவேல் ஆலயத்தை முற்றுகையிட்டு, அங்கு பணியாற்றி வரும் குருவானவரை மாற்றக் கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் இன்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆலயத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குருவானவராகக் காலேப் மான்சிங் பணியில் சேர்ந்தார். அங்கு பணியாற்றி வந்த வேத பாட ஆசிரியை சுபா என்பவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஆசிரியை கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதுகுறித்துத் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, குருவானவர் காலேப் மான்சிங் மீது கடந்த ஜூன் 14-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதன் பின்னர் அவர் காவல் நிலைய ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கின் தொடர்ச்சியாக, இன்று ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்கு வந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஆலய வளாகத்தில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: "இந்த ஆலயத்திற்குக் காலேப் மான்சிங் வந்த நாள் முதல் தொடர்ந்து பிரச்சனைகள் நிலவி வருகின்றன. ஊழியம் செய்ய வரும் பெண்களைக் கேலியும் கிண்டலும் செய்து அவமானப்படுத்தி வருகிறார். வயது முதிர்ந்தவர்கள் ஊழியம் செய்யக் கூடாது என்றும், தனது பேச்சைக் கேட்பவர்கள் மட்டுமே ஊழியம் செய்ய முடியும் என்றும் வற்புறுத்துகிறார்.
இதனால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் பேராயரிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இவரை உடனடியாக மாற்றிவிட்டு வேறு புதிய குருவானவரை நியமிக்க வேண்டும்" என்று அவர்கள் கூறினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, குருவானவரின் தூண்டுதலின் பேரில் ஆலய ஊழியர் ஒருவர் தங்களைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாகக் கூறி போராட்டக்காரர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களின் அனுமதியின்றி வீடியோ எடுத்ததைக் கண்டித்து நடந்த இந்த வாக்குவாதத்தால் ஆலய வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
Siva SriJun 28, 2026 - 02:17:28 PM | Posted IP 104.2*****
தயவு செய்து பாஸ்டர் என்று சிஎஸ்ஐ ல கூறுவாங்க.ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் ஃபாதர் என்று குழப்பாதீர்கள்.பாதர் என்றதும் RC மிலா என்று யோசிக்க வேண்டியுள்ளது என்கிறார்கள் பொது நிலையினர்.
மேலும் தொடரும் செய்திகள்

இபிஎஸ் தலைமையில் அதிமுக தள்ளாடுகிறது: தவெகவில் இணைந்த விஜய பாஸ்கர் பேட்டி
வியாழன் 2, ஜூலை 2026 5:06:22 PM (IST)

திருச்செந்தூரில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 2, ஜூலை 2026 4:14:27 PM (IST)

வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் மீண்டும் பெரிய ஓட்டை: வாகன ஓட்டிகள் அச்சம்!
வியாழன் 2, ஜூலை 2026 3:24:31 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பண ராஜவேல் பொறுப்பேற்பு!
வியாழன் 2, ஜூலை 2026 12:34:29 PM (IST)

தவெக ஆட்சியைத் தரைமட்டமாக்க திமுக சதி : ஸ்டாலின் மீது சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!
வியாழன் 2, ஜூலை 2026 12:23:48 PM (IST)

ஸ்பா சென்டர் நடத்த ரூ.20,000 மாமூல் வாங்கிய 2 பெண் போலீஸ் அதிகாரிகள் அதிரடி கைது!
வியாழன் 2, ஜூலை 2026 12:13:36 PM (IST)



naan thaanJun 30, 2026 - 07:20:10 PM | Posted IP 104.2*****