» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிறுவர்களுக்குப் பாலியல் தொந்தரவு: பள்ளி வார்டனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 24, ஜூன் 2026 9:58:18 PM (IST)
தூத்துக்குடியில் 14 வயதுடைய இரண்டு சிறுவர்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், பள்ளி வார்டனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 14 வயதுடைய இரண்டு சிறுவர்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தூத்துக்குடி அருகே உள்ள வடக்கு காரசேரி பகுதியைச் சேர்ந்த மங்கேஷ்குமார் (26) என்பவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவர் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் வார்டனாக பணியாற்றி வந்தார். இவ்வழக்கின் இறுதி விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் முழுமையாக ஆராயப்பட்ட நிலையில், இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பைப் போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா இன்று (24.06.2026) வெளியிட்டார்.
அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட மங்கேஷ்குமார் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால், அவரை குற்றவாளி என நீதிபதி உறுதி செய்தார். இதையடுத்து, குற்றவாளி மங்கேஷ்குமாருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 12,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பிரீத்தா தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். போலீசாரின் விரைவான சட்ட நடவடிக்கையால் குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக ஆட்சியில் முடக்கப்பட்ட கல்வி மையம்: விஜய் வந்தவுடன் ஒப்புதல் - ஸ்ரீதர் வேம்பு நன்றி
வியாழன் 25, ஜூன் 2026 4:10:31 PM (IST)

அப்பாவை அங்கு தேடாதீர்கள்! - முதல்வர் விஜய்யின் விமர்சனத்திற்கு ஸ்டாலின் பதிலடி!
வியாழன் 25, ஜூன் 2026 12:36:37 PM (IST)

பள்ளி மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்: பாலிடெக்னிக் மாணவர் உள்பட 2பேர் கைது!
வியாழன் 25, ஜூன் 2026 12:15:04 PM (IST)

மின்வாரியத்திற்கு ரூ.2.47 லட்சம் கோடி கடன்: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் அமைச்சர் நிர்மல் குமார்!
வியாழன் 25, ஜூன் 2026 12:05:59 PM (IST)

சென்னையில் புதிய அரசுப் பேருந்துகளின் சேவை : முதல்வர் விஜய் தொடங்கி வைத்து பயணம்!
வியாழன் 25, ஜூன் 2026 11:41:03 AM (IST)

முதலமைச்சர் விஜயின் பேச்சு ஆணவத்தின் உச்சம்: திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம்!
புதன் 24, ஜூன் 2026 8:49:49 PM (IST)


