» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஓடும் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
செவ்வாய் 23, ஜூன் 2026 7:37:24 AM (IST)
நாசரேத்தில் ஓடும் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரைச் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள வாழையடி முதல் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (29). தொழிலாளியான இவர், இரண்டு தினங்களுக்கு முன்பு நாசரேத் பேருந்து நிலையத்தில் மது போதையில் சுற்றித் திரிந்துள்ளார்.
பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்தில் பயணித்த 17 வயது சிறுமிக்கு வெங்கடேஷ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி சத்தமிட்டுக் கூச்சலிட்டுள்ளார்.
சிறுமியின் சத்தம் கேட்டு உஷாரான பேருந்து பயணிகள், வெங்கடேஷை மடக்கிப் பிடித்து நாசரேத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சகாய சாந்தி தீவிர விசாரணை நடத்தி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வெங்கடேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக ஊழல் பட்டியல்: தவெக அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்த அண்ணாமலை!
வெள்ளி 26, ஜூன் 2026 5:33:39 PM (IST)

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா?: மு.க.ஸ்டாலின் பதில்!
வெள்ளி 26, ஜூன் 2026 5:16:32 PM (IST)

கரன்சி டிரேடிங் பெயரில் ரூ.24.64 லட்சம் மோசடி: இருவர் கைது - ரூ.3 லட்சம் மீட்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 5:06:22 PM (IST)

தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்கும் ஆய்வு டெண்டர் ரத்து: தமிழ்நாடு அரசு உத்தரவு!
வெள்ளி 26, ஜூன் 2026 3:55:22 PM (IST)

சிகிச்சையில் இருந்த இளம்பெண் பலி: அமோனியா வாயு கசிவு விபத்து உயிரிழப்பு 14 ஆக உயர்வு!
வெள்ளி 26, ஜூன் 2026 3:45:57 PM (IST)

சென்னை மாநகராட்சியில் ரூ. 284 கோடி மதிப்பிலான 35 டெண்டர்கள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
வெள்ளி 26, ஜூன் 2026 3:21:30 PM (IST)


