» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாணவர்களுக்குக் காலை உணவுக்குப் பதில் பிஸ்கட் விநியோகம்: 3 பேர் பணிநீக்கம்!
திங்கள் 22, ஜூன் 2026 8:17:10 PM (IST)
விளாத்திகுளம் ஒன்றியத் துவக்கப்பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவுக்குப் பதிலாக பிஸ்கட் வழங்கப்பட்ட புகாரில், பணியாளர்கள் மூவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஒன்றியத் துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தில் முறைகேடு மற்றும் பற்றாக்குறை நிலவுவதாகப் புகார் எழுந்தது. இப்புகார் தொடர்பாகத் தொடக்கப்பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் நேரடியாகப் பள்ளிக்குச் சென்று தீவிர விசாரணை நடத்தினார்.
விசாரணையில், புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றதற்குப் பின், அதற்கேற்ப உணவுப் பொருட்களுக்கான திருத்தப்பட்ட தேவைப் பட்டியலை மகளிர் சுயஉதவிக் குழுவினர் முறையாகச் சமர்ப்பிக்கவில்லை என்பது தெரியவந்தது. இதன் காரணமாகவே மாணவர்களுக்குக் காலை உணவு பற்றாக்குறை ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த காலை உணவுத் திட்ட கணக்காளர், சமையலர் மற்றும் உதவியாளர் ஆகிய மூவரையும் பணியில் இருந்து நீக்க அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். அதன்படி, மகளிர் சுயஉதவிக் குழு கூட்டத்தில் அவசரத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர்கள் மூவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியைக்குக் கல்வித்துறை அதிகாரிகள் குறிப்பாணை (மெமோ) வழங்கியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக ஊழல் பட்டியல்: தவெக அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்த அண்ணாமலை!
வெள்ளி 26, ஜூன் 2026 5:33:39 PM (IST)

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா?: மு.க.ஸ்டாலின் பதில்!
வெள்ளி 26, ஜூன் 2026 5:16:32 PM (IST)

கரன்சி டிரேடிங் பெயரில் ரூ.24.64 லட்சம் மோசடி: இருவர் கைது - ரூ.3 லட்சம் மீட்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 5:06:22 PM (IST)

தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்கும் ஆய்வு டெண்டர் ரத்து: தமிழ்நாடு அரசு உத்தரவு!
வெள்ளி 26, ஜூன் 2026 3:55:22 PM (IST)

சிகிச்சையில் இருந்த இளம்பெண் பலி: அமோனியா வாயு கசிவு விபத்து உயிரிழப்பு 14 ஆக உயர்வு!
வெள்ளி 26, ஜூன் 2026 3:45:57 PM (IST)

சென்னை மாநகராட்சியில் ரூ. 284 கோடி மதிப்பிலான 35 டெண்டர்கள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
வெள்ளி 26, ஜூன் 2026 3:21:30 PM (IST)


