» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மும்பை தாதர் - சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு : பயணிகள் கோரிக்கை!
வியாழன் 11, ஜூன் 2026 10:11:04 AM (IST)

மும்பை தாதர் - நெல்லை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலைக் கல்லிடைக்குறிச்சி வழியாகச் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் கவிஞர் கல்லிடைக் குயில் உமர் பாரூக் தலைமையில், சங்க நிர்வாகிகள் அனீஸ் பாத்திமா மற்றும் தானிஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் சென்னை சென்ட்ரல் பகுதியில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்தில் தெற்கு ரயில்வே துணைத் தலைமைச் செயல்பாட்டு மேலாளர் எம்.சபரீஷ் குமாரிடம் ரயில் பயணிகளின் முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து விரிவாகப் பேசினர்.
அந்த மனுவில், "மும்பை தாதர் - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலை, அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி வழியாகச் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இதன் மூலம் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மக்கள் மற்றும் வணிகர்கள் மும்பை மாநகரத்திற்கு நேரடியாகச் சென்று வர ஏதுவாக இருக்கும்.
தற்பொழுது வாரம் மும்முறை மட்டுமே இயக்கப்பட்டு வரும் செங்கோட்டை - தாம்பரம் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலைப் பொதுமக்களின் மிக நெரிசலான தேவையைக் கருத்தில் கொண்டு, தினசரி ரயிலாக மாற்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்லிடைக்குறிச்சிக்கு பிளாக் ஸ்டேஷன் அந்தஸ்து: கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்திற்குப் 'பிளாக் ஸ்டேஷன்' அந்தஸ்து வழங்கி, அதன் உள்கட்டமைப்பு மற்றும் பயணிகள் வசதிகளை முழுமையாகத் தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதாக தெற்கு ரயில்வே துணைத் தலைமைச் செயல்பாட்டு மேலாளர் எம்.சபரீஷ் குமார் அவர்களிடம் உறுதியளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களின் பிரச்சினைகளுக்கு எப்போது கால்ஷீட்? தமிழக முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:53:37 PM (IST)

நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசினார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:40:24 PM (IST)

தவெக ஆட்சியிலும் தொடர் கதையாகும் கனிம வளக் கடத்தல்? பொதுமக்கள் புகார்!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:20:20 PM (IST)

எனது கருத்தை தவறாக புரிந்து கொண்டவர்கள் தான் தற்குறிகள் : நடிகர் மகேந்திரன்
செவ்வாய் 16, ஜூன் 2026 11:20:40 AM (IST)

காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம்: முதல்வர் விஜய் உத்தரவு
செவ்வாய் 16, ஜூன் 2026 10:52:47 AM (IST)

பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது - விவசாயிகள் மகிழ்ச்சி!
செவ்வாய் 16, ஜூன் 2026 10:48:00 AM (IST)


