» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரயிலில் வந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை : கொத்தனாருக்கு தர்ம அடி கொடுத்துப் போலீசில் ஒப்படைப்பு!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:37:41 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பாளையங்கோட்டைக்கு ரயிலில் வந்த இளம்பெண்ணைத் தொடர்ச்சியாகப் பின்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த கொத்தனாரை, அப்பெண்ணின் உறவினர்கள் பிடித்துத் தர்ம அடி கொடுத்து மேலப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், நெல்லை பாளையங்கோட்டையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது பணிக்காகத் தினமும் ஆறுமுகநேரியிலிருந்து பாளையங்கோட்டைக்கு ரயிலில் பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ரயிலிலிருந்து இறங்கும் அந்த இளம்பெண்ணைத் தொடர்ச்சியாகப் பின்தொடர்ந்து அவர் வேலை செய்யும் அலுவலகம் வரை சென்று வந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு, அந்தப் பெண் வேலை செய்யும் நிறுவனத்தின் காவலாளி, அந்த நபரின் இந்த விபரீதச் செயலைக் கவனித்து அவரை வன்மையாகக் கண்டித்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார்.
இந்த அச்சுறுத்தல் குறித்து அந்த இளம்பெண் தனது உறவினர்களிடம் விபரமாகத் தெரிவித்துள்ளார். அதன் பேரில், நேற்று முன்தினம் அப்பெண்ணின் உறவினர்களும் அவருடன் மறைமுகமாக ரயிலில் பாளையங்கோட்டைக்கு வந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போதும் அந்த நபர், வழக்கம்போல இளம்பெண்ணை அத்துமீறிப் பின்தொடர்ந்து பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கடும் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் அந்த நபரைச் சூழ்ந்து பிடித்துத் தர்ம அடி கொடுத்தனர். பின்னர், அவரைப் பாளையங்கோட்டைப் பகுதிக்கு அருகிலுள்ள மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் கொண்டு சென்று ஒப்படைத்தனர்.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் (38) என்பதும், அவர் கொத்தனார் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து, இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காகச் சுரேஷ் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் முறைப்படி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாதந்தோறும் 2,000 கோடி யு.பி.ஐ பரிவர்த்தனைகள்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்!!
ஞாயிறு 19, ஜூலை 2026 10:39:47 AM (IST)

மக்கள் தீர்ப்பை திமுகவிற்கு மதிக்கத் தெரியவில்லை : நிதி அமைச்சர் மரிய வில்சன் விமர்சனம்!
ஞாயிறு 19, ஜூலை 2026 10:24:28 AM (IST)

பணத்தை வாரி இறைத்து அப்பாவிகளின் வாயை அடைக்க முயற்சி: தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!
சனி 18, ஜூலை 2026 5:46:54 PM (IST)

தமிழகத்தில் ஜூலை 22 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!
சனி 18, ஜூலை 2026 5:39:54 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

காளியம்மன் கோயில் கொடை விழா மாட்டு வண்டி பந்தயம் : 52 ஜோடி மாடுகள் பங்கேற்பு!
சனி 18, ஜூலை 2026 12:11:57 PM (IST)


