» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மகளிர் உரிமைத் தொகை மறுசீரமைப்புக்குக் கால அவகாசம் தேவை: முதல்வர் விஜய் அறிவிப்பு!
வியாழன் 14, மே 2026 4:36:44 PM (IST)

தமிழகத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தைச் சீரமைக்க அரசுக்குக் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார். எனினும், மே மாதத்திற்கான தொகை விரைவில் விடுவிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வச் செய்திக் குறிப்பில்: பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூ. 1,000 உரிமைத் தொகைத் திட்டத்தைப் புதிய அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப மறுசீரமைப்பு செய்ய வேண்டியுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதால், அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது.
இதற்கிடையில், மே 2026 மாதத்திற்கான உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் எந்தவிதத் தடையுமின்றி விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் களத்தில் தவெக தனது அறிக்கையில், 65 வயது வரையிலான அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ. 2,500 வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இது பெண்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தற்போது திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளும் இத்தொகையை ரூ. 2,000-ஆக உயர்த்துவதாக வாக்குறுதி அளித்திருந்த நிலையில், புதிய அரசு இத்திட்டத்தை "மறுசீரமைப்பு" செய்ய அவகாசம் கேட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் திமுக அரசு 1.31 கோடி பயனாளிகளுக்கு மூன்று மாத முன்பணம் மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ. 5,000 வழங்கியிருந்தது. தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிப்படி ரூ. 2,500 வழங்கப்படுமா அல்லது தற்போதைய ரூ. 1,000 நடைமுறையே நீடிக்குமா என்பதை அறியப் பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுகவில் கொறடா போர்: பேரவைத் தலைவரிடம் இபிஎஸ் - சி.வி.எஸ் தரப்பு மனு!
வியாழன் 14, மே 2026 4:20:43 PM (IST)

விஜய்யின் வருகைக்காக புதிய சோபா வாங்கவில்லை - திருமாவளவன் விளக்கம்!
வியாழன் 14, மே 2026 3:55:53 PM (IST)

தமிழகத்தில் 200 யூனிட் இலவச மின்சாரம் அமல்: புதிய மின்சாரக் கட்டணப் பட்டியல் வெளியீடு!
வியாழன் 14, மே 2026 3:49:19 PM (IST)

மகளிர் உரிமைத் தொகை வழங்காமல் இழுத்தடிப்பு : முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 14, மே 2026 3:40:18 PM (IST)

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்வு - முதல்வர் விஜய் உத்தரவு!
வியாழன் 14, மே 2026 3:30:06 PM (IST)

தெற்கு ரயில்வேயின் புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக எஸ்.என். நரேன் நியமனம்!
புதன் 13, மே 2026 8:10:40 PM (IST)


