» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நிற்போம்: விஜய் தலைமையிலான அரசுக்கு சீமான் வாழ்த்து!

செவ்வாய் 5, மே 2026 4:44:59 PM (IST)

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அமையவுள்ள புதிய அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாளை மறுநாள் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சீமான் அவருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகச் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிபெற்ற அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகப் புதிய அரசுக்கும் எனது வாழ்த்துகள்

மேலும், தமிழர்களின் நலனுக்காகவும், தாய்நிலத்தின் உயர்வுக்காகவும் நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாகக் களப்பணியாற்றும் என்றும், மண்ணுக்கும் மக்களுக்குமான ஆக்கப்பூர்வமான மாற்று அரசியலைப் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நின்று முன்னெடுப்போம் என்றும் சீமான் தனது அறிக்கையில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

Sivasriமே 5, 2026 - 05:08:33 PM | Posted IP 172.7*****

புதிய அரசியலை தவறாகப் பயன்படுத்தாமல் அனைத்து கட்சியும் இணைந்து மக்களுக்கு செயல்படும் நோக்கமாக இருக்க வேண்டும்.புதிய தலைவர் அவரது குடும்பத்தினர்க்கு பணி செய்யவில்லை.தமிழக மக்களுக்கு அதை உணர்ந்து செயல்படுபவர்கள் உண்மையான தமிழனாக இருக்க முடியும்.சமூக பணி செய்ய முன் வர வேண்டும்.நயவஞ்சகம் எவர் மத்தியிலும் இருக்கக்கூடாது.புதிய அரசியலுக்கு வாழ்த்துக்கள் 🙏 இதை உணர்வூப்பூர்வமாக வெளிபடுத்துகிறtutyonline க்கு நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory