» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக, அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பெற்றாலும் விஜய் வலிமை பெறவில்லை : திருமாவளவன் கருத்து!
சனி 2, மே 2026 5:19:09 PM (IST)
திமுக, அதிமுக எதிர்ப்பு வாக்குகளை விஜய் அதிகம் பெறுகிறார். ஆனால், தனித்த சக்தியாக அவர் இன்னும் வலிமை பெறவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலிப் பதிவின் முக்கிய அம்சங்கள்: "மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஒரு கொள்கைப்பிடிப்புள்ள கூட்டணி. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தக் கூட்டணியைச் சிதைக்கப் பலரும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டனர். குறிப்பாக, விசிகவை வெளியேற்றி திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்தத் திட்டமிட்டனர். ஆனால், தொலைநோக்குப் பார்வையோடு பொறுமை காத்து கூட்டணியை நிலைநிறுத்தினோம். நாம் கூடுதல் இடங்களுக்காக முரண்டு பிடித்து வேறொரு முடிவை எடுத்திருந்தால், தமிழக அரசியல் களம் இன்று தலைகீழாக மாறியிருக்கும். கூட்டணியின் வெற்றிக்காக விசிக பெருந்தன்மையுடன் செயல்பட்டது.
திமுக, அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் காலம் காலமாக இருந்து வருகின்றன. இப்போது அந்த வாக்குகளை அதிமுக, விஜய் மற்றும் சீமான் ஆகியோர் பிரிக்கின்றனர். இதில் திமுக, அதிமுகவுக்கு எதிரான வாக்குகளை விஜய் அதிகம் பெறுகிறார். ஆனால், அந்த இரு அணிகளையும் பின்னுக்குத் தள்ளும் தனித்த சக்தியாக அவர் இன்னும் வலிமை பெறவில்லை.
கருத்துக் கணிப்புகளைத் தாண்டி திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் எனத் தெரிவித்த திருமாவளவன், விசிக போட்டியிட்ட 8 தொகுதிகளிலும் உறுதியாக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். "வெற்றி தோல்வி எதுவாக இருந்தாலும் நமது அரசியல் பயணம் நீர்த்துப் போகாது; அது மேலும் தீவிரமடையும்" என்றும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துறைமுகம் தொகுதியில் சேகர்பாபு வெற்றி!
திங்கள் 4, மே 2026 4:45:26 PM (IST)

புதுச்சேரியில் முதல்வர் என். ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி!
திங்கள் 4, மே 2026 4:41:37 PM (IST)

கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி
திங்கள் 4, மே 2026 4:24:56 PM (IST)

கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தோல்வி ; முன்னணி அமைச்சர்கள் கடும் பின்னடைவு!
திங்கள் 4, மே 2026 4:14:35 PM (IST)

ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முதலிடம்: வரலாறு படைக்கும் த.வெ.க.!
திங்கள் 4, மே 2026 3:40:30 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 4 தொகுதிகளில் தவெக ஆதிக்கம்: அம்பையில் அதிமுக முன்னிலை!
திங்கள் 4, மே 2026 12:41:03 PM (IST)


