» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிறுமியைப் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:57:05 AM (IST)
13 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ரமேஷ் என்ற வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30), விவசாயி. இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு, டியூஷனுக்குச் சென்று கொண்டிருந்த 13 வயது பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அப்போதைய ஆய்வாளர் அங்கையற்கண்ணி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரமேஷைக் கைது செய்தார்.
இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், நேற்று தனது இறுதித் தீர்ப்பை வழங்கினார். அதில்: குற்றவாளி ரமேஷுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ₹5,000 அபராதம் விதிக்கப்பட்டது.மற்றொரு பிரிவின் கீழ் ஓராண்டு சிறை மற்றும் ₹1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தமிழக அரசு சார்பில் ₹3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் உஷா ஆஜரானார்.
குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தரத் தீவிரமாகப் பணியாற்றிய கூடுதல் கண்காணிப்பாளர் சண்முகம், வள்ளியூர் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், ஆய்வாளர் சாந்தி மற்றும் ஏட்டு செல்வ புனிதா ஆகியோரை மாவட்டக் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் பாராட்டினார்.
நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 8 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மிகக் கடுமையாகத் தொடரும் என்று மாவட்டக் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் முதல்வராவார்... 200+ தொகுதிகளில் தவெக வெல்லும் - செங்கோட்டையன் பேட்டி!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:44:41 PM (IST)
_1777377317.jpg)
தேர்தல் முடிவுகளுக்குப் பின் காவிரி ஆணையக் கூட்டத்தைக் கூட்டுக: சீமான் வலியுறுத்தல்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:25:41 PM (IST)

மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை : முதல்கட்ட கணினி குலுக்கல் ஒதுக்கீடு பணி நிறைவு!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:17:19 PM (IST)

கோடை வெயில்: நெல்லை அணைகளின் நீர்மட்டம் சரிவு – 52 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 4:49:57 PM (IST)

திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி: மிஸ் கூவாகம் பட்டத்தை வென்றார் கோவை சூர்யா!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 3:43:20 PM (IST)

நெல்லை அருகே பெண்ணைத் தாக்கி 29 பவுன் நகை கொள்ளை - சிறுவன் உட்பட 4 பேர் கைது!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 3:38:01 PM (IST)


