» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஜூன் 15-ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 20, ஏப்ரல் 2026 3:37:26 PM (IST)

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கில், இருவரும் ஜூன் 15-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சங்கீதா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இணையவழியில் விவாகரத்து மனுத் தாக்கல் செய்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் தாம் தனியாக வசித்து வருவதாகவும், தனிப்பட்ட காரணங்களால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவும் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், சுமுகத் தீர்வு காணத் தாம் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததால் நீதிமன்றத்தை நாடியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சந்திரசேகரன், வழக்கைச் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கின் முதல்கட்ட விசாரணைக்காக இன்று (ஏப்ரல் 20) நேரில் ஆஜராகுமாறு இருவருக்கும் ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி சசிகலா முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
விஜய் தரப்பு கோரிக்கை: தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் விஜய் நேரில் ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் குமரேசன் ஆஜராகி, விஜய் காணொலி வாயிலாக ஆஜராக அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்தார். இது குடும்பப் பிரச்சினை என்பதால், இது குறித்து ஊடகங்களில் விவாதிக்கத் தடை விதிக்கக் கோரி விஜய் தரப்பில் மற்றுமொரு மனுவும் சமர்ப்பிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சசிகலா, இந்த வழக்கில் விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் வரும் ஜூன் 15-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார். விஜய் - சங்கீதா திருமணம் கடந்த 1998-ஆம் ஆண்டு பிரிட்டனில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் 1999-ஆம் ஆண்டு சென்னையில் முறைப்படி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட வேண்டும் : அதிமுக வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:51:43 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு சதுரங்கப் போட்டி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:08:41 PM (IST)

வாக்குப்பதிவு நாள் வரை 144 தடை உத்தரவு: தேர்தல் விதிமுறைகளை மீறினால் 2 ஆண்டு சிறை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 3:19:19 PM (IST)

தென் மாநிலங்களின் ஆதரவு இல்லாமலேயே பாஜக மத்தியில் ஆட்சி அமைக்கும்: வைகோ எச்சரிக்கை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 12:07:56 PM (IST)

திமுகவை எதிர்த்தால்தான் வளர முடியும் என்பது தவறு: விஜய் குறித்து முதல்வர் விளக்கம்!
திங்கள் 20, ஏப்ரல் 2026 11:29:33 AM (IST)

தமிழகத்தில் நாளை ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்: 23-ம் தேதி வாக்குப்பதிவு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 10:40:19 AM (IST)

