» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுகவுக்கு ஆதரவு : தமிழக விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் இபிஎஸ் உடன் சந்திப்பு!

வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:21:04 PM (IST)



வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமியின் தமிழக விவசாய சங்க கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். 

இதையொட்டி, சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்துத் தங்களது ஆதரவை உறுதிப்படுத்தினர். அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பயிர்க் கடன் தள்ளுபடி, புதிய தடுப்பணைகள் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதன் காரணமாகவே இந்த ஆதரவு முடிவை எடுத்துள்ளதாகச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த வாரம், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக உழவர் சந்தை விவசாயிகள் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் அதிமுகவுக்கு ஆதரவு வழங்கியிருந்தன. அதன் தொடர்ச்சியாக, தற்போது தமிழக விவசாய சங்க கூட்டமைப்பும் அதிமுகவுடன் கைகோர்த்துள்ளது. இச்சந்திப்பின் போது, விவசாயிகள் தரப்பில் வழங்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளைப் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory