» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

புதன் 15, ஏப்ரல் 2026 9:24:21 PM (IST)

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு இயற்கையாக மரணம் வரும் வரை சிறையிலேயே இருக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 14 வயது சிறுமி ஒருவரை ஏரல் பகுதியைச் சேர்ந்த மகாராஜன் (42) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது குறித்துப் பெறப்பட்ட புகாரின் பேரில், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மகாராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணையை முடித்த நீதிபதிபிரீத்தா இன்று (15.04.2026) தீர்ப்பு வழங்கினார். அதில்: பாலியல் வன்கொடுமைக்கு குற்றவாளி மகாராஜனுக்கு இயற்கையாக மரணம் வரும் வரை ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம். கொலை மிரட்டலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2,500 அபராதம். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தத் தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு ஆதாரங்களைச் சமர்ப்பித்து, குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்ததற்காக ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நிரேஷ், முன்னாள் ஆய்வாளர் லெட்சுமி பிரபா, அரசு தரப்பு வழக்கறிஞர் ஜுடு ஏஞ்சலோ, தலைமை காவலர் அரிராணி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பாராட்டித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory