» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வேன் மோதி இளம்பெண் பலி: பாதயாத்திரை பக்தர்கள் 3 பேர் படுகாயம்!
புதன் 8, ஏப்ரல் 2026 8:30:32 AM (IST)
கன்னியாகுமரி நோக்கிப் பாதயாத்திரை சென்ற வடமாநிலப் பக்தர்கள் மீது வேன் மோதியதில், இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3பேர் படுகாயமடைந்தனர்.
ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 15 பெண்கள், கன்னியாகுமரிக்கு பாதயாத்திரை செல்லத் திட்டமிட்டனர். இவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை ஒரு வேனில் ஏற்றி வந்ததோடு, நான்கு இருசக்கர வாகனங்களை உருட்டியபடி பாதயாத்திரை மேற்கொண்டு வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு கயத்தாறில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் தங்கிய இந்தக் குழுவினர், நேற்று அதிகாலை 4:30 மணியளவில் மீண்டும் பயணத்தைத் தொடங்கினர். கயத்தாறு நான்கு வழிச்சாலை இணையும் பகுதியில் பக்தர்கள் சென்றுகொண்டிருந்தபோது, சென்னையிலிருந்து நாகர்கோவில் நோக்கிப் பர்னிச்சர் பொருட்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று எதிர்பாராத விதமாகப் பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.
இந்தக் கோர விபத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த சஞ்சு (27), சவுமியா (62), மஞ்சு (27) மற்றும் தீப்சி (52) ஆகிய நான்கு பேர் படுகாயமடைந்தனர். மேலும் இவர்களது வேன் மற்றும் இருசக்கர வாகனங்களும் பலத்த சேதமடைந்தன. விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர், காயமடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி இளம்பெண் சஞ்சு உயிரிழந்தார். மற்ற மூன்று பெண்களும் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து, வேன் ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் : தேர்தல் நடைமுறைகளை உறுதி செய்ய உத்தரவு
புதன் 8, ஏப்ரல் 2026 5:49:25 PM (IST)

இளைஞர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை!
புதன் 8, ஏப்ரல் 2026 5:36:31 PM (IST)

வாக்காளர்களுக்கு விநியோகிக்க ரூ.200 கோடி பதுக்கலா? நெல்லையில் அதிகாரிகள் அதிரடி சோதனை!
புதன் 8, ஏப்ரல் 2026 5:20:34 PM (IST)

சட்டத்தைக் கையில் எடுத்த உதவி ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை: சரத்குமார் வலியுறுத்தல்!
புதன் 8, ஏப்ரல் 2026 4:56:41 PM (IST)

தமிழக தலைமைச் செயலாளர் அதிரடி மாற்றம்: புதிய தலைமைச் செயலாளர் நியமனம்
புதன் 8, ஏப்ரல் 2026 4:21:36 PM (IST)

மக்கள் பணத்தைத் தொட வேண்டிய அவசியம் எனக்கில்லை: நெல்லையில் விஜய் பிரச்சாரம்!
புதன் 8, ஏப்ரல் 2026 3:46:25 PM (IST)

