» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!

புதன் 8, ஏப்ரல் 2026 8:23:51 AM (IST)

தமிழ் புத்தாண்டுப் பண்டிகையை முன்னிட்டுப் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், சென்னை எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - நெல்லை சிறப்பு ரயில்கள்:

நெல்லை - எழும்பூர் (வண்டி எண்: 06070): நெல்லையிலிருந்து நாளை (வியாழக்கிழமை) இரவு 11:40 மணிக்குப் புறப்பட்டு சென்னை எழும்பூர் சென்றடையும்.

எழும்பூர் - நெல்லை (வண்டி எண்: 06069): வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்பட்டு நெல்லை வந்தடையும்.

இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன. கோடை விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டுச் சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory