» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் மார்ச் 21ம் தேதி ரமலான் பண்டிகை : அரசு காஜி கூட்டமைப்பு அறிவிப்பு

ராதாகிருஷ்ணன் | வியாழன் 19, மார்ச் 2026 8:25:15 PM (IST)

தமிழகத்தில் இன்று ஷவ்வால் மாதத்திற்கான பிறை தென்படாததால், ரமலான் நோன்பு 30 ஆகப் பூர்த்தி செய்யப்பட்டு, வரும் சனிக்கிழமை (மார்ச் 21) ஈகைத் திருநாள் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு காஜி கூட்டமைப்பு பொருளாளர் முஜிபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தமிழகத்தில் இன்று (19-03-2026, வியாழக்கிழமை) ஹிஜ்ரி 1447-ஆம் ஆண்டு ஷவ்வால் மாதத்திற்கான பிறை எங்கும் தென்படவில்லை. எனவே, ரமலான் மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்தி செய்து, வரும் 21-03-2026 சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை (ஈகைத் திருநாள்) கொண்டாடப்படும்," எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு வழங்கப்பட வேண்டிய ஸதகத்துல் ஃபித்ரு அளவு குறித்துப் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: ஹனஃபி முறை 1 கிலோ 633 கிராம் கோதுமை அல்லது அதன் கிரயமான (மதிப்பு) ரூபாய் 90/- வழங்கப்பட வேண்டும். ஷாஃபிஈ முறை - 2 கிலோ 400 கிராம் கோதுமை அல்லது அரிசியைப் பொருளாக மட்டுமே வழங்க வேண்டும் (பணமாகக் கொடுக்கக் கூடாது). தர்மங்கள் தழைத்தோங்கவும், சகோதரத்துவம் பெருகவும் அனைத்து இஸ்லாமியப் பெருமக்களுக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய கிளை திறப்பு விழா

ராதாகிருஷ்ணன் | வியாழன் 19, மார்ச் 2026 3:14:59 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory