» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி இசைத் விழா: 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

திங்கள் 9, மார்ச் 2026 9:37:29 PM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கலையரங்கத்தில் மாசி இசைத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பல்வேறு நகரங்களிலிருந்து வந்திருந்த இசைப் பள்ளி மாணவர்கள் தங்களது கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்த இசைத் திருவிழாவில் சென்னை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். விழாவில் கர்நாடக சங்கீதம், வாய்ப்பாட்டு, மிருதங்கம் வாசித்தல் மற்றும் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன.

காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த நிகழ்வில், சென்னை மறைமலைநகர் சுருதிலயா இசைப் பள்ளியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இசைப்பள்ளி ஆசிரியை மகாலட்சுமி அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். மாணவர் மோனிஷ் விஜய் பாடிய தனிப் பாடலுடன் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து மற்ற மாணவர்கள் பல்வேறு பக்திப் பாடல்களைப் பாடி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவில், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த இசைத் திருவிழாவைக் கோவிலுக்குத் தரிசனம் செய்ய வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் திரளாகக் கலந்து கொண்டு ரசித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory