» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விருப்ப மனு சமர்ப்பிக்க பிப்.20-ம் தேதி வரை கால அவகாசம் நீடிப்பு : தவெக அறிவிப்பு
சனி 14, பிப்ரவரி 2026 12:26:53 PM (IST)

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தவெகவினர் விருப்ப மனுவை சமர்ப்பிக்கக் கால அவகாசம் பிப்.20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் தங்களுக்கான விருப்ப மனுவைப் பெறுவதற்கும் அதனைச் சமர்ப்பிப்பதற்குமான கடைசித் தேதி இன்று (14.02.2026) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக, வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பெரும்பாலானோரால் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்க முடியாமல் போனதாகத் தெரிவித்து வருகின்றனர். எனவே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி, வரும் 20-ம் தேதி (20.02.2026) வரை கழகத் தோழர்கள் தங்களது விருப்ப மனுவைத் தலைமை நிலையச் செயலகத்தில் சமர்ப்பிக்கலாம். விருப்ப மனுக்களைச் சமர்ப்பிக்க அதுவே கடைசி நாள் ஆகும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக போட்டி: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேட்டி
சனி 14, பிப்ரவரி 2026 8:33:04 PM (IST)

பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி திட்டங்கள் கலந்தாய்வு கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு!
சனி 14, பிப்ரவரி 2026 5:53:48 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மகா சனி பிரதோஷம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
சனி 14, பிப்ரவரி 2026 5:31:12 PM (IST)

தற்பெருமை பேசும் விஜய் ஒரு கிணற்றுத் தவளை; திமுகவின் பி டீம் : பாஜக விமர்சனம்
சனி 14, பிப்ரவரி 2026 4:17:13 PM (IST)

விஜய்- திரிஷா குறித்து அநாகரிக விமர்சனம்: நயினார் நாகேந்திரனுக்கு த.வெ.க. கண்டனம்!
சனி 14, பிப்ரவரி 2026 12:53:03 PM (IST)

திரிஷாகிட்ட இருந்து விஜய் வெளியே வரணும்: நயினார் நாகேந்திரன் விமர்சனம் - திமுக கண்டனம்
சனி 14, பிப்ரவரி 2026 12:42:15 PM (IST)

