» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மதுரையில் தேர்தல் பொதுக் கூட்டம்: மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!
வியாழன் 5, பிப்ரவரி 2026 12:04:01 PM (IST)
பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற பிப்ரவரி 28 ஆம் தேதி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்துள்ள அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரசாரத்தையும் தொடங்கியுள்ளது. கடந்த மாதம் 23ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பிரசாரத்தை தொடக்கிவைத்தார்.
அப்போது முதலில் மதுரையில் பொதுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு பின்னர், மதுராந்தகத்துக்கு கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. இந்த நிலையில், வருகின்ற 28-ஆம் தேதி மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாக்லேட் தருவதாக கூறி சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ ட்டத்தில் வாலிபர் கைது!
வியாழன் 5, பிப்ரவரி 2026 8:28:55 AM (IST)

போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்: ஆட்சியர் தகவல்!
புதன் 4, பிப்ரவரி 2026 3:47:50 PM (IST)

நாட்டில் என்ன நடக்கிறது என்றே விஜய்க்கு தெரியவில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி!
புதன் 4, பிப்ரவரி 2026 3:43:19 PM (IST)

நகை திருட்டுப் புகாரில் உண்மை இல்லை: அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ அறிக்கை தாக்கல்!
புதன் 4, பிப்ரவரி 2026 3:35:51 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

