» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருமலை நாயக்கருக்கு திருவுருவச் சிலை அமைக்க நடவடிக்கை : அமைச்சர் கீதா ஜீவன் உறுதி

திங்கள் 2, பிப்ரவரி 2026 10:56:51 AM (IST)

கோவில்பட்டியில் மாமன்னர் திருமலை நாயக்கருக்கு திருவுருவச் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன்  தெரிவித்தார். 

மாமன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் பேரவை சார்பில் கோவில்பட்டி இனாம் மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே மாமன்னர் திருமலை நாயக்கர் 443வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு மாமன்னர் திருமலை நாயக்கர்  திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து அமைச்சர்  கீதாஜீவன் பேசுகையில் "மாமன்னர் திருமலை நாயக்கருக்கு திருவுருவ சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக முதல்வர், துணை முதல்வர், கனிமொழி எம். பி. கவனத்திற்கு எடுத்து சென்று திருவுருவ சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். இன்னும் 20 நாள்களில் தேர்தல் நாள் அறிவிக்கப்படஉள்ளது. கடைசி நேரத்தில் கோரிக்கை வைத்துள்ளனர் இருந்த போதிலும்  தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பேன் என்றார்
.
விழாவில் நிறுவனத் தலைவர் சிவன் ராஜ், மாநிலத் தலைவர் மனோஜ் குமார், மாநிலச் செயலாளர் பாலாஜி, மாநில அமைப்பு செயலாளர் ஜெனரேஸ், இணை அமைப்புச் செயலாளர் சாமி உட்பட பலர் கலந்து கொண்டு திருமலை நாயக்கர்  திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory