» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை தொகுதியில் பாஜக சார்பில் மீண்டும் போட்டி: நயினார் நாகேந்திரன் பேட்டி!
வியாழன் 29, ஜனவரி 2026 4:43:56 PM (IST)

2026-ல் திருநெல்வேலி தொகுதி பாஜகவின் பட்டியலில் இடம்பெறும் என்று திருநெல்வேலி தொகுதியில் மீண்டும் தான் மீண்டும் போட்டியிடுவதை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சூசகமாக தெரிவித்தார்.
திருநெல்வேலி தச்சநல்லூரில் ரூ.6லட்சம் மதிப்பீட்டில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் அமைக்கப்பட்டுள்ள புதிய உயர்மின் கோபுரத்தை திறந்து வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: "தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. தேமுதிக தனது நிலைப்பாட்டை வரும் 3-ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தினசரி ஒரு கொலை நடந்து வருகிறது. வட மாநிலத்தவர்களுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் அதிகமான கொலை சம்பவங்கள் நடந்து வருவதற்கு முதல் காரணமே கஞ்சா புழக்கம்தான். ஆனால், அதைப் பற்றி தமிழக முதல்வர் எதையும் பேசாமல் வாக்குக்காக மகளிர் மாநாடு நடத்தி வருகிறார்.
திமுக மகளிர் மாநாட்டில் குக்கர், ஹாட் பாக்சில் பிரியாணி என அனைத்தையும் வைத்து ஆள் பிடித்துக் கொண்டு சென்று கூட்டத்தை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களையும் கசங்கி பிழிந்து, கெடுபிடி வசூல் செய்து உதயநிதி ஸ்டாலினும், கனிமொழியும் கூட்டத்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இருந்த தமிழகம் தற்போதைய முதல்வரால் வாழ தகுதி இல்லாத இடமாக மாறிவிட்டது. கஞ்சா விற்பதை தடுப்பதற்கு தமிழக காவல் துறையும் அரசும் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? கஞ்சா விற்பவர்களை பாதுகாப்பதற்காக காவல் துறை செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்களையும், போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களையும் கட்டுப்படுத்த காவல் துறை ஏன் தயங்குகிறது?
காவல் துறையின் ஈரல் கெட்டு விட்டதாக கருணாநிதி சொல்லி வந்தார். ஆனால் இப்போது காவல் துறைக்கு ஈரல் இருப்பதாகவே தெரியவில்லை.இரட்டை இன்ஜின் சர்க்கார் என்றால், மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுவதுதான். அதையே டபுள் இன்ஜின் சர்க்கார் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழக மக்கள் உள்ளிட்ட பல மாநில மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் மத்திய அரசு திட்டங்களுக்கு முதல்வர் புகைப்படத்தை போட்டு விளம்பரம் தேடி, தாங்கள் செய்வதைப் போல் சொல்லி வருகிறார்கள். தமிழகத்துக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், சாலைகள், பாலங்கள், ரயில்வே விமான நிலையங்கள் போன்றவை அமைப்பதற்கும் ரூ.14 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் மத்திய அரசு எதையும் தரவில்லை என்று திமுக கூறி வருகிறது.
ஓபிஎஸ் கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். நல்லவர்கள் எல்லோரும் எங்களோடு தான் வருவார்கள். ஓபிஎஸ்ஸும் நல்லவர்தான். இதுவரை கூட்டணியில் இணைவதற்கு ஓபிஎஸ்சிடம் எதுவும் பேசவில்லை. தேவைப்பட்டால் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. எங்கும் மோசமான ஆட்சி நடைபெறுவதாக தகவல்கள் இல்லை. திமுக ஆட்சி செய்து தமிழகத்தை மோசமாக்கிவிட்டதாக நான் வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகிறேன். பாஜக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மத்திய அரசின் கூடுதல் நிதியை தமிழகத்துக்குப் பெற்றுத் தருவோம். அனைத்து விதமான குற்றங்களையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.
கடந்த 2001, 2006, 2011, 2016 மற்றும் 2021-ல் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டுள்ளேன். திருநெல்வேலி தொகுதி மக்கள் எனது உடன்பிறந்த சகோதரர்களை போன்றவர்கள். என்னை அவர்களின் வீட்டில் ஒரு பிள்ளையாக பார்க்கிறார்கள். எப்போதும் என்னையும் திருநெல்வேலி தொகுதி மக்களையும் பிரித்து பார்க்க முடியாது. 2026-ல் திருநெல்வேலி தொகுதி பாஜகவின் பட்டியலில் இடம்பெறும்.
பாஜக ஆட்சி நடத்தும் மாநிலங்களிலோ, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளிலோ பாஜகவின் சித்தாந்தத்தால் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. எதை வைத்து முதல்வர் இப்படி சொல்லிவருகிறார் என்பது புரியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் நல்லவர்கள் இடம்பெறுவார்கள் நாட்டு மக்கள் நல்ல பயனடைவார்கள். 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்” என்று தெரிவித்தார். "யார் யாரெல்லாம் நல்லவர்கள் என்பது அடுத்தடுத்து தெரியவரும்” என சசிகலா கூட்டணியில் இணைவாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுகவில் மீண்டும் இணைய ஓபிஎஸ் விருப்பம்: எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுப்பு!
வியாழன் 29, ஜனவரி 2026 4:21:38 PM (IST)

விஜய் தலைமையில் மக்களாட்சியை அமைக்க உறுதி ஏற்போம் : என்.ஆனந்த் அறிக்கை!
வியாழன் 29, ஜனவரி 2026 11:43:31 AM (IST)

கால்நடை ஆய்வாளர் பணியிடத்துக்கான தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 29, ஜனவரி 2026 11:26:57 AM (IST)

தாமதமான நடவடிக்கை என்றாலும், யுஜிசி விதிகளில் மாற்றம் வரவேற்கத்தக்கது: முதல்வர் ஸ்டாலின்
வியாழன் 29, ஜனவரி 2026 11:11:32 AM (IST)

பீகார் வாலிபர், மனைவி, குழந்தையோடு கொலை : நண்பர்களே தீர்த்துக்கட்டிய கொடூரம்!
வியாழன் 29, ஜனவரி 2026 8:27:26 AM (IST)

கல்லிடைக்குறிச்சி மகளிர் அரபிக் கல்லூரியில் 11ஆவது பட்டமளிப்பு விழா
வியாழன் 29, ஜனவரி 2026 8:21:27 AM (IST)