» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுராந்தகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி: இ.பி.எஸ் உள்ளிட்ட தலைவர்கள் உற்சாக வரவேற்பு

வெள்ளி 23, ஜனவரி 2026 4:42:07 PM (IST)

தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி வியூகங்கள், பிரசாரங்களை வகுத்து வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க. - பா.ஜ.க. பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தல் வியூகங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி பொதுக்கூட்டம் நடைபெறும் மதுராந்தகத்திற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.

தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெறும் மதுராந்தகம் பகுதிக்கு ஹெலிகாப்டரில் பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory