» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இளம்பெண்ணை தாக்கி 2½ பவுன் நகை பறிப்பு : 2 வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
சனி 6, டிசம்பர் 2025 8:32:02 AM (IST)
உடன்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணை கீழே தள்ளிவிட்டு, 2½ பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு கிராமத்தை சேர்ந்தவர் பென்சிகர் மனைவி தமிழரசி (35). இவர் நேற்று மதியம் மணப்பாட்டில் இருந்து உடன்குடிக்கு உறவினர் சகாயசாமியுடன் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். உடன்குடி அருகே வந்து கொண்டிருந்தபோது, 2 வாலிபர்கள் திடீரென வழிமறித்து மொபட்டுடன் சேர்த்து கீழே தள்ளி விட்டுள்ளனர்.
இதில் மொபட்டுடன் நிலைகுலைந்து கீழேவிழுந்து காயமடைந்த தமிழரசி கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். தமிழரசியும் உறவின பெண்ணும் அவர்களுடன் போராடினர். ஆனால் அந்த 2பேரும் அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் துணையுடன் தமிழரசி உடன்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் யேசு ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நகை வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களையும் போலீசார் தேடிவருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்!
சனி 13, டிசம்பர் 2025 8:59:30 AM (IST)

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
சனி 13, டிசம்பர் 2025 8:46:31 AM (IST)

புதிதாக 16,94,339 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:34:58 PM (IST)

திருப்பரங்குன்றத்தில் இருப்பது தீபத்தூண் அல்ல... சர்வே தூண் தான்! - தமிழக அரசு வாதம்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 5:26:29 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

பெண்குரலில் பேசி வாலிபரிடம் ரூ.17½ லட்சம் மோசடி செய்தவர் கைது!
வெள்ளி 12, டிசம்பர் 2025 3:28:52 PM (IST)


.gif)