» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தாமிரபரணி கரையில் பனை விதைகள் விதைக்கும் விழா: சபநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார்!

வியாழன் 6, நவம்பர் 2025 5:16:48 PM (IST)



நெல்லை உடையார்பட்டி தாமிரபரணி ஆற்றின் கரையில் பனை விதைகள் விதைக்கும் விழாவை சபநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார்.

திருநெல்வேலி சமூக நல்லிணக்கப்பேரவை, தமிழ்நாடு அய்க்கப், திருநெல்வேலி துறவியர் பேரவை மற்று தோழமைக் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாநில அளிவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மிதி வண்டி பேரணி, மரக்கன்று மற்றும் பனை விதை நடும் விழா தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சைக்கிள் பேரணி துவங்கியது.

இதில் அய்க்குப்பை சேர்ந்த 12பேர் பயணித்தனர். மாலையில் இந்த பேரணியை திருநெல்வேலி மாவட்டம் கௌசானல் புரம் இதய ஜோதி செவிலியர் கல்லூரி வளாகத்தில் திருஇருதய சகோதரர்கள் சபை அதிபர் பேரருட்சகோதரரர் விக்டர் தாஸ் தலைமையில் வரவேற்றனர் . பின் சுமார் 300 மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவிகளால் நடப்பட்டது. மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் மரகன்றுகளை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் கஸ்பார் வரவேற்றார்.

அதன் பின் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சி பறையாட்டம் நடைபெற்றது. இரண்டாம் நாள் பளையங்கோட்டை கிறிஸ்து ராஜா பள்ளி வளாகத்தில் இருந்து பேரணி துவங்கியது. இந்த பேரணியை தமிழ்நாடு துறவயிர் பேரவை தலைவர் அட்சகோதரி மேரி மரிய பிலேமி , தமிழ்நாடு அய்க்கப் இயக்குனர் பார்த்தசாரதி முன்னிலையில் திரு இருதய சகோதரரர்கள் சபை அதிபர் பேரருட் சகோதரர் விக்டர் தாஸ் துவக்கி வைத்தார்.

இந்த பேரணியில் அய்க்கப் அமைப்பை சேர்ந்த 12 பேருடன் உள்ளூரை சேர்ந்த கல்லூரி மாணவிகள், அருட்சகோதரிகள், அருட்சகோதர்கள், அருட்தந்தைகள் உள்பட பலர் சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டனர். திருநெல்வேலி உடையார்பட்டி தாமிரபரணி ஆற்றை இந்த பேரணி வந்தடைந்தது. இங்கு மரகன்று நடுத்தல் மற்றும் ஆயிரம் பனை விதை விதைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்று தமிழ்நாடு பேரரவை தலைவர் மு.அப்பாவு துவக்கி வைத்து பேசினார்.
 
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மேயர் ராமகிருஷ்ணன், திருநெல்வேலி சப் கலெக்டர் பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்தனர். பின் மரக்கன்று நட்டனர். தொடர்ந்து பனை விதை விதைக்கப்பட்டது. கலந்துகொண்டோருக்கு விதைப்பந்து மற்றும் துணிப்பை வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, 12 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோகுலவாணி சுரேஷ், திருநெல்வேலி பசுமை நகர அரிமா சங்க தலைவர் அரிமா பொ.திருமலை முருகன், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முதல்வர் அப்துல்காதர், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்வியியல் கல்லூரி முதல்வர் அந்தோணி ராஜ், கௌசானல்புரம் இதய ஜோதி செவிலியர் கல்லூரி முதல்வர் சுஜா வெனிஷா, கவிஞர். பேரா, ராமகிருஷ்ணன் மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியில் விதைப்பந்து வழங்குதல், மற்றும் கையெழுத்து இயக்கம் துவங்குதல், மரக்கன்று நடுதல் போல நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு பேரரவை தலைவர் மு.அப்பாவு கையெழுத்திட்டு பசுமை இயக்கத்தினை துவக்கி வைத்தார். பாளையங்கோட்டை தூய இஞ்ஞாசியார் கல்வியியல் கல்லூரி அருட்சகோதரி வசந்தி மெடோனா நன்றி கூறினார்.

அதன்பின் சைக்கிள் பேரணி அங்கிருந்து கிளம்பி பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் ஆயர் இல்லத்துக்கு வந்து சேர்ந்தது. அங்கு கல்லூரி மாணவிகளால் சுமார் 300 மரக்கன்று நடப்பட்டது. தொடர்ந்து கல்லூரி மாணவிகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 

இதில் அய்க்குப் சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டவர்கள் நடித்த இயற்கை அன்னை நாடகம் மனதை உருக்குவதாக இருந்தது. தொடர்ந்து பாறையாட்டம், திரு இருதய ஜோதி செவிலியர் கல்லூரி மாணவிகளின் நடனம் உள்பட பல கலை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மறை மாவட்ட பரி பாலகர் பேரருட்தந்தை மோட்ச ராஜன், பாளையங்கோட்டை தமிழக துறவியர் பேரவை மரிய நட்சத்திர மாநிலத்தலைவி ஜாய்சி, பாளையங்கோட்டை அமலவை மாநிலத்தலைவி வழக்கிறஞர் அமலி, பாளையங்கோட்டை புனித அன்னாள் மாநிலத்தலைவர் ஜாக்குலின், அன்னபாக்கியம் மருத்துவ மனை டேனியல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பொது நிதியர் அருட்சகோதர்கள் ஆல்பர்ட் சேவியர், பொது செயலர் டேனீஷ் மைக்கில், கிருஸ்து ராஜா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கனீஷ் பீட்டர், கல்விகழக செயலர் அன்பரசன், அலெக்ஸ் அந்தோணி, இருதயம் பர்ணாண்டஸ், அதன்பின் சைக்கிள் வீரர்களை தூத்துக்குடி மாவட்டத்துக்கு வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி வசவப்பபுரத்தில் வைத்து நடந்தது. மூன்றாவது நாளாக இன்று தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory