» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இலங்கை சிறைப்பிடித்த 35 மீனவர்களை விடுவிக்க வேண்டும் : விஜய் வலியுறுத்தல்!
திங்கள் 3, நவம்பர் 2025 4:01:18 PM (IST)
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 35 மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தினர். எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என கூறி மீனவர்கள் 35 பேரை கைது செய்தனர்அவர்களிடம் இருந்து 3 விசைப்படகுகள், ஒரு நாட்டுப்படகு ஆகியவற்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர். நாட்டுப்படகில் இருந்த 4 மீனவர்கள், 3 விசைப்படகுகளில் இருந்த 31 பேர் என மொத்தம் 35 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றுள்ளனர். அவர்கள் தமிழகத்தின் நாகை மாவட்டம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம். இதன்பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இந்தநிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 35 மீனவச் சகோதரர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மன வேதனையை அளிக்கிறது.
கைது செய்யப்பட்டுள்ள நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும். மற்ற மாநில மீனவர்கள் மீது காட்டும் அக்கறையைப் போலவே எங்கள் மீனவர்கள் மீதும் காட்டி, இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும். மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல், உண்மையாகத் தர வேண்டும். இனி இதுபோல நடக்காமல் இருக்க, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை மத்திய அரசும் தமிழக அரசும் காண வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நடிகர்கள் அரசியலுக்கு வரலாம்... ஆனால் அரசியலில் நடிக்கக் கூடாது’ - சரத்குமார்
திங்கள் 3, நவம்பர் 2025 9:31:13 PM (IST)

ஜவ்வாது மலையில் தங்கக்காசு புதையல் கண்டெடுப்பு : அரசு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
திங்கள் 3, நவம்பர் 2025 9:22:21 PM (IST)

வணிக வளாக கட்டிடம் இடிந்து காவலர் படுகாயம் : தூத்துக்குடியில் பரபரப்பு!
திங்கள் 3, நவம்பர் 2025 7:49:54 PM (IST)

தமிழகத்தில் 1,429 சுகாதார ஆய்வாளர் காலிப்பணி இடங்கள்: நவ.16 வரை விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 3, நவம்பர் 2025 3:18:29 PM (IST)

அதிமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவரை கொல்ல முயற்சி: ஆட்சியரிடம் புகார்!
திங்கள் 3, நவம்பர் 2025 12:55:06 PM (IST)

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து விட்ட ஸ்டாலின் அரசு: இபிஎஸ் கண்டனம்
திங்கள் 3, நவம்பர் 2025 12:39:53 PM (IST)


.gif)