» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடம்பூர் ரயில் நிலையத்தில் குருவாயூர் விரைவு ரயில் நின்று செல்லும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

திங்கள் 27, அக்டோபர் 2025 9:34:16 PM (IST)



வரும் அக்.31ஆம் தேதி முதல் குருவாயூர் - சென்னை விரைவு ரயில் (வண்டி எண்.  16127 / 16128) இரு மார்க்கத்திலும் கடம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

குருவாயூர் - சென்னை விரைவு ரயில் (எண்: 16127 - 16128) தென் தமிழகத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் பகல் நேர ரயிலாக உள்ளது. இந்த ரயில் கடம்பூர், வாஞ்சி மணியாச்சியில் இருமார்க்கங்களிலும் நிற்காமல் சென்று வந்தது. இந்த ரயில் வருகிற 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

அதில், தினமும் சென்னையில் இருந்து வரும் இந்த ரயில் (16127) இரவு 7.53 மணிக்கு கோவில்பட்டிக்கு வந்து 7.55 மணிக்கு புறப்பட்டு செல்லும். அங்கிருந்து கடம்பூருக்கு இரவு 8.07 மணிக்கு சென்று, இரவு 8.08 மணிக்கு புறப்படும். அங்கிருந்து புறப்பட்டு செல்லும் ரயில் இரவு 8.18 மணிக்கு வாஞ்சி மணியாச்சிக்கு சென்று, இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

அதே போல், மறுமார்க்கத்தில் குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் (16128) தினமும் காலை 9.28 மணிக்கு வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்துக்கு வந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, அங்கிருந்து 9.39 மணிக்கு கடம்பூர் சென்று, காலை 9.40 மணிக்கு புறப்பட்டு, காலை 9.56 மணிக்கு கோவில்பட்டி சென்றடையும். அங்கிருந்து காலை 9.58 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடம்பூர், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் குருவாயூர் விரைவு ரயில் நிற்கும் என்ற அறிவிப்புக்கு சுற்றுவட்டார பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.கடம்பூரில் சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுத்த மத்திய ரயிலவே மந்திரி அஸ்வினி வைஷ்ணவிற்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory