» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

2026 தேர்தல் திமுகவிற்கு சோதனையாக இருக்கும் : கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ பேச்சு பேச்சு!

திங்கள் 27, அக்டோபர் 2025 10:22:18 AM (IST)



2026 சட்டமன்ற தேர்தல் திமுகவிற்கு சோதனையாகவும், அதிமுகவிற்கு சாதனையாகவும் இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூபேசினார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள அதிமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் அதிமுக வடக்கு மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் செ.ராஜூ சதலைமை வகித்தார். 

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் "524 வாக்கறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக 50 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் திமுக ஆட்சியில் அதிகரித்துள்ளது. டெல்டா பகுதியில் விவசாயிகள் கண்ணீரில் மிதக்கும் அல்ல நிலை, திமுக ஆட்சியில் உள்ளது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டு பன்றிகள், மான்கள் தொல்லையினால் விவசாயிகள் கடந்த 5 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் எந்த நிவாரணமும், பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தின் பெயரில் ஏமாற்றி உள்ளனர். இந்த ஆட்சியில் தூய்மை பணியாளர்கள் பாதிக்கப்பட்டு போராடும் நிலை உள்ளது.

தூய்மைப் பணியாளர்கள் முதல் கோட்டையில் உள்ள உயர் அதிகாரிகள் வரை ஏமாற்றப்பட்டு, ஏமாற்றத்தின் விளிம்பில் உள்ளனர். மக்கள் விரக்தியில் உள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தல் திமுகவிற்கு சோதனையான தேர்தலாகவும், அதிமுகவிற்கு சாதனையான தேர்தலாக இருக்கும் என்றார். இதில் முன்னாள் எம்எல்ஏ மோகன், ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார், பழனிச்சாமி, போடூசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory