» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள்: சட்டப்பேரவையில் பரபரப்பு !

வியாழன் 16, அக்டோபர் 2025 12:21:15 PM (IST)



நாமக்கல் கிட்னி முறைகேடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என்ற வாசகத்துடன் கூடிய பேட்ஜ் அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று பேரவைக்கு வருகை தந்தனர்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை கூடிய நிலையில், நேற்று கரூர் கூட்டநெரிசல் விவகாரம் குறித்து முதல்வரின் விளக்கத்தை தொடர்ந்து விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசு உரிய பாதுகாப்பு வழங்கியிருந்தால் கூட்டநெரிசல் ஏற்பட்டிருக்காது எனத் தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் காரசார விவாதம் மேற்கொண்ட நிலையில், அமைச்சர் சிவசங்கரின் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், நாமக்கல் கிட்னி முறைகேடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிட்னிகள் ஜாக்கிரதை’ என்ற வாசகத்துடன் கூடிய பேட்ஜ் அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று பேரவைக் கூட்டத்துக்கு வருகை தந்துள்ளனர். இதனிடையே, பாமக பேரவைக் குழுத் தலைவராக உள்ள ஜி.கே. மணியை நீக்கக் கோரி அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து பேரவை கூட்டத்தில் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory