» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமைச்சருக்கு ஆஸ்கர் விருது கொடுக்க வேண்டும்: அன்புமணி கிண்டல் - அன்பில் மகேஷ் பதிலடி!

செவ்வாய் 30, செப்டம்பர் 2025 10:58:03 AM (IST)

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருது கொடுக்க வேண்டும் என பேசிய பா.ம.க., தலைவர் அன்புமணிக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் நேற்று பேட்டியளித்த அன்புமணி, 'கரூர் கூட்ட நெரிசலில், 41 பேர் உயிரிழந்துள்ளனர். கரூர் சென்ற ஒரு அமைச்சர், தேம்பி தேம்பி அழுகிறார். அவருக்கு விரைவில், ஆஸ்கர் விருது கொடுக்க வேண்டும் என, ஆஸ்கர் நிறுவனத்தை கேட்டுக் கொள்கிறேன். ஒரு துயர சம்பவத்தை வைத்து, அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த கூத்தை மக்கள் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்து விட்டனர். மக்களை எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது' என, அமைச்சர் மகேஷை மறைமுகமாக விமர்சித்தார்.

அவருக்கு பதில் அளித்து, அமைச்சர் மகேஷ் வெளியிட்ட அறிக்கை: பா.ம.க., தலைவர் அன்புமணி நாகரிகமின்றி, கொச்சையாக பேசியிருக்கிறார். கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் ஒன்பது பேர், பள்ளிக்கு செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதிலும் உள்ள, எங்கள் பிஞ்சு குழந்தைகள். அவர்களை என்னுள் ஒருவராக கருதுகிறேன். மக்களில் ஒருவராக என்னை கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன்.

முதல்வர் ஸ்டாலின் சொல்வதுபோல், எந்த தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார். தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள், மக்களின் பக்கம் நிற்கிறோம். ஆறுதல் தேடுகிறோம்; ஆறுதல் சொல்கிறோம். வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட, கொச்சைப்படுத்துபவரின் கருத்தை, இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory