» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு: இபிஎஸ் உத்தரவு!

செவ்வாய் 30, செப்டம்பர் 2025 10:51:16 AM (IST)

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேரை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார் செங்கோட்டையன். இது தொடர்பான நடவடிக்கையை 10 நாட்களுக்குள் எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார். செங்கோட்டையன் கெடு விதித்த மறுநாளே, அவரது கட்சி பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். இதையடுத்து, அவரது ஆதரவாளர்களின் பொறுப்புகளும் பறிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தன் இல்லத்தில் செங்கோட்டையன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மேலும் 40 பேரை அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளைய நிர்வாகிகளின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளன. செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கட்சி பதவி தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory