» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தொண்டர் படையை விஜய் உருவாக்க வேண்டும் : துரை வைகோ எம்.பி. பேட்டி

செவ்வாய் 30, செப்டம்பர் 2025 8:30:36 AM (IST)

திமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களில் உள்ளது போல தொண்டர் படை என்ற அமைப்பை விஜய் உருவாக்க வேண்டும் என்று மதிமுக துணைப் பொதுச் செயலர் துரை வைகோ எம்.பி தெரிவித்தார்.

கோவில்பட்டியில், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  கரூரில் மிகத் துயரமான சம்பவம் நடந்துள்ளது. இதில் அனைவருடைய தவறும் உள்ளது. இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக் கூடாது. அரசியல், ஆன்மிக, கேளிக்கை நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும், காவல்துறையின் அறிவுரைகளைக் கேட்டு நடத்த வேண்டும்.

மக்களுக்கு விழிப்புணர்வு இருந்தால் தான் இது போன்ற நிகழ்வுகளை முற்றிலுமாக தடுக்க முடியும். இப்பிரச்னை தொடர்பாக உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. திமுக, மதிமுகவில் உள்ளது போல, கட்சிக்காரர்களைக் கொண்டு வருங்காலங்களில் தொண்டர் படையை விஜய் உருவாக்க வேண்டும் என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory