» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வேதனையை கூறி அழுபவர்களிடம் ஆறுதல் கூற வார்த்தைகளே இல்லை : நிர்மலா சீதாராமன்

திங்கள் 29, செப்டம்பர் 2025 4:32:38 PM (IST)



கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, பிரதமர் மோடியின் சார்பாக ஆறுதல் கூறவே நான் இங்கே வந்துள்ளேன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் அறிவுறுத்தலில் கரூர் வேலுச்சாமிபுரம் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். காவல் துறை அதிகாரிகளிடம் நடந்தவற்றை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தனர்.

பின்னர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "என்னையும், அமைச்சர் எல்.முருகனையும் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற பிரதமர் மோடி அனுப்பி வைத்தார். அவர் கரூருக்கு வர விருப்பப்பட்டாலும், வர முடியாத சூழலால் எங்களை அனுப்பி வைத்துள்ளார்.

வேதனையை கூறி அழுபவர்களிடம் ஆறுதல் கூற வார்த்தைகளே இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் கூறியதை பிரதமர் மோடியிடமும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் தெரிவிப்பேன். நான் இங்கே வந்தது மாநில அரசு என்ன செய்தது? விசாரணை ஆணையம் என்ன சொல்கிறது? என்று பார்ப்பதற்கோ, கேட்பதற்கோ அல்ல. யார் தவறு செய்தது என்று என்னால் சொல்ல முடியாது. பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து வருமாறு பிரதமர் மோடி சொன்னார். அதற்காகவே வந்துள்ளோம். ஆறுதல் கூறவே வந்தோம். இதில் வேறு எதுவும் இல்லை.

பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக்கூட வார்த்தை வரவில்லை. பாதிக்கப்பட்டவர்களை கண்டு கலங்கி நின்றேன். இதுபோன்ற சம்பவம் இனி நாட்டில் எங்குமே நடைபெறக்கூடாது. பிரதமர் மோடி அறிவித்த நிவாரண நிதி பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளுக்கே வந்து சேரும்." எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory