» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிகனமழை பெய்தாலும், தண்ணீர் ஊருக்குள் வராது : மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!
திங்கள் 29, செப்டம்பர் 2025 3:50:00 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில், கடந்த காலத்தை போல் அதிகனமழை பெய்தாலும், தண்ணீர் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளோம் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தொடக்கத்தில் கரூரில் எதிர்பாராத விதமாக நடைபெற்ற துயர சம்பவத்தால் உயிரிழந்தவர்களுக்கு 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர், மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: மழை காலம் தொடங்கயிருப்பதால் அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அன்னம்மாள் கல்லூரி வழியாக மழை நீர் வெளியேற வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் முள்ளக்காடு பகுதியில் மழைநீர் உப்பளம் வழியாகவே கடந்து சென்றது. தற்போது மழை நீர் செல்வதற்கு ஏற்றாற்போல் சாலையோரத்தில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு மழைநீர் கடலுக்கு செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.
பின்னர், மாநகராட்சிக்கு எல்லைக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளில் பயன்பாட்டில் இருந்து வந்த 18226 தெருவிளக்குகள் 15வது சிஎப்சி திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2887 மற்றும் இதர திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் என சேர்த்து தற்சமயம் மொத்தம் 21759 தெருவிளக்குகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதில் ஏற்படும் பழுதுகள் மற்றும் அதனை பராமரிக்க 13 மின் கம்பியாளர் மற்றும் 12 மின் உதவியாளர்களும், லேடர் வாகனம் இயக்க ஓட்டுநர் 1 என ஆக மொத்தம் 26 பணியாளர்களை தினக்கூலி அடிப்படையில் நகர் வாழ்வாதார மையம் மூலம் தற்காலிக அடிப்படையில் ஆறு மாத காலத்திற்கு பெற்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. உள்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், நடைபெற்ற பணிகளுக்கு நன்றி தெரிவித்தும், சில கோரிக்கை மனுக்களை ஆணையர், மேயரிடம் வழங்கினர்.
பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: ஏற்கனவே 11 வழித்தடங்கள் மூலம் மழைநீர் கால்வாய்கள் வழியாக கடலுக்குச் செல்லும் வகையில் இருந்து வருகின்றன. சுமார் 6 கி.மீ தூரத்திற்கு பக்கிள் ஓடை முழுமையாக தேவையற்ற கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. சில இடங்களில் சூழ்நிலைக்கேற்ப சற்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தை போல் அதிகனமழை பெய்தாலும், பல வழிகளில் தண்ணீர் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் அதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்கி உள்ளோம்.
கோரம்பள்ளம் குளம் நிரம்பி முள்ளக்காடு, முத்தையாபுரம் வழியாக கடலுக்குச் செல்லும் 12 கி.மீ தூரம் வழித்தடம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். மாநகர பகுதிகளில் பழைய பூங்காக்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. புதிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பல்வேறு வகையில் அனைத்து தரப்பினரும் பயனடைந்து வருகின்றனர். மொத்தத்தில் 206 பூங்காக்கள் செயல்பாட்டிற்கு வரும். தற்போது பொதுமக்கள் அதிகம் வந்தும் செல்லும் பகுதிகளில் புதிதாக 420 சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதற்கு அடுத்த கட்டமான 400 சாலைகள் அமைக்கப்பட உள்ளது. மாநகராட்சி பகுதிக்கு புதிய பகுதியின் தேவைக்கு 1800 மின்விளக்குகள் தேவைப்படுகிறது. அதையும் நடைமுறைப்படுத்தப்படும். 50 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள பைப் லைன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போதுள்ள சாலை உயரத்திற்கு ஏற்றாற்போல் 8 அடி, 9 அடி ஆழத்தில் புதிய கருப்பு மற்றும் ப்ளு பைப் மூலம் நல்லமுறையில் மக்களை பாதிக்காத வகையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. வல்லநாட்டிலிருந்து வந்து கொண்டிருந்த 1வது மற்றும் 2வது பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதால் 3வது மற்றும் 4வது பைப் லைன் மூலம் தான் இங்கு தண்ணீர் வருகிறது.
அப்படியிருந்தும் தினசரி தண்ணீர் வழங்கிக் கொண்டு வருகிறோம். 60 வார்டு பகுதிகளிலும் உள்ள அனைத்து கால்வாய்களில் தேங்கியுள்ள மணல் திட்டுகள், கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டு வருகின்றன. எதிர்வரும் காலங்களில் மழை பாதிப்பு இருக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு தான் அப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிறிய குறுகளான பகுதி முழுவதும் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை கருத்துகளுக்கு ஏற்ப பாரபட்சமின்றி அனைத்துப் பணிகளும் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் கேரி பேக், கப் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தாமல் அனைவரும் எதிர்கால தலைமுறையினர் நலன் கருதி தவிர்க்க வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில், இணை ஆணையர் சரவணக்குமார், பொறியாளர் தமிழ்செல்வன், நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, முனீர் அகமது, ஆணையர்கள் பாலமுருகன், கல்யாணசுந்தரம், சுகாதார ஆய்வாளர்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர், நெடுமாறன், ராஜபாண்டி, மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலெட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் கீதா முருகேசன், சுரேஷ்குமார், இசக்கிராஜா, அதிஷ்டமணி, சரவணக்குமார், கண்ணன், பொன்னப்பன், சரண்யா உள்பட மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அம்மன் கோவில்களில் சூரசம்ஹார விழா கோலாகலம் : திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 8:23:01 PM (IST)

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர்... முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 4:21:24 PM (IST)

மத்திய அரசு நிதி விடுவிப்பு: ஆர்டிஇ திட்டத்தில் நடைமுறைகள் தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு
வியாழன் 2, அக்டோபர் 2025 4:06:42 PM (IST)

கடலில் மூழ்கி தந்தை, 2 மகள்கள் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:50:14 PM (IST)

கொள்கை எதிரி: விஜய் எப்படி பாஜகவின் பிடியில் இருப்பார்? நயினார் நாகேந்திரன் கேள்வி!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:44:04 PM (IST)

விஜய் மீது வழக்குப்பதிய தமிழக அரசுக்கு அச்சமா? திருமாவளவன் கேள்வி!
வியாழன் 2, அக்டோபர் 2025 12:41:45 PM (IST)
