» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்: 200 பேர் கைது
திங்கள் 29, செப்டம்பர் 2025 3:06:46 PM (IST)

விளாத்திகுளம் அருகே பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்,புதூர் கயத்தார், எட்டையாபுரம், ஓட்டப்பிடாரம், உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையை தொடர்ந்து பிப்ரவரி, மார்ச் மாதம் செய்த அதிக கனமழையினால் மிளகாய், உள்ளி, கொத்தமல்லி, சூரியகாந்தி, கம்பு, சோளம்,உளுந்து, மாசி போன்ற அனைத்து சேதம் அடைந்தனர்.
சேதம் அடைந்த பயிர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்த இழப்பீடு வழங்க கோரியும், 2024 - 2025 நிதி ஆண்டிற்கான கனமழையினால் சேதம் அடைந்த அனைத்து பயிர்களுக்கும் காப்பீடு தொகையை உடனடியாக விடுவிக்க கோரியும் விவசாயிகள் பல கட்ட போராட்டங்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாத நிலையில் இன்று புதூர் பேருந்து நிலையம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து பேருந்து நிலையம் முன்பு 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விவசாயிகளை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
மறியல் போராட்டம் காரணமாக புதூர் பேருந்து நிலையம் முன்பு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. முன்னதாக கரூரில் தமிழக வெற்றி கழக பொதுக்கூட்டத்தின் போது உயிரிழந்த 41 பேருக்கு புதூர் பேருந்து நிலையம் முன்பு அனைத்து விவசாயிகள் சார்பாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அம்மன் கோவில்களில் சூரசம்ஹார விழா கோலாகலம் : திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 8:23:01 PM (IST)

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர்... முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 4:21:24 PM (IST)

மத்திய அரசு நிதி விடுவிப்பு: ஆர்டிஇ திட்டத்தில் நடைமுறைகள் தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு
வியாழன் 2, அக்டோபர் 2025 4:06:42 PM (IST)

கடலில் மூழ்கி தந்தை, 2 மகள்கள் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:50:14 PM (IST)

கொள்கை எதிரி: விஜய் எப்படி பாஜகவின் பிடியில் இருப்பார்? நயினார் நாகேந்திரன் கேள்வி!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:44:04 PM (IST)

விஜய் மீது வழக்குப்பதிய தமிழக அரசுக்கு அச்சமா? திருமாவளவன் கேள்வி!
வியாழன் 2, அக்டோபர் 2025 12:41:45 PM (IST)
