» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஸ்பெயின் கார் பந்தயம்: அஜித்குமார் ரேஸிங் அணி 3வது இடம் பிடித்து சாதனை!

திங்கள் 29, செப்டம்பர் 2025 12:47:57 PM (IST)



ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயம் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்குமார் ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.

நடிகர் என்பதை தாண்டி, கார் பந்தய வீரராகவும் திகழும் அஜித் இப்போது ‘அஜித்குமார் ரேஸிங்' என்ற பெயரில் சொந்த கார் பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்த அணி துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றது.

அஜித்குமார் தற்போது ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளார். கார் பந்தயத்துக்கு முன்பாக அஜித், அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா ஆகிய இருவருமே முத்தமிட்டு வாழ்த்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்பெயினின் பிரெஸ்டிஜியஸ் சர்க்யூட் டி பார்சிலோனாவில் நேற்று நடந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்குமார் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. இதையடுத்து இந்திய தேசியக்கொடியை ஏந்தி அஜித்குமார் உற்சாகத்துடன் ரசிகர்களை நோக்கி நன்றி தெரிவித்தார். ஏற்கனவே துபாயில் நடந்த போட்டியில் 2-ம் இடமும், இத்தாலி மற்றும் பெல்ஜியத்தில் நடந்த போட்டிகளில் 3-ம் இடமும் அஜித்குமார் ரேஸிங் அணி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory