» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க விஜய் திட்டம் : பாதுகாப்பு கோரி மனுதாக்கல்!

திங்கள் 29, செப்டம்பர் 2025 11:37:19 AM (IST)

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் சந்திக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தவெக மனு தாக்கல் செய்துள்ளது. 

கரூர் வேலு​சாமிபுரத்​தில் கூட்ட நெரிசல் ஏற்​பட்​ட நிலை​யில், நேற்று முன்தினம் இரவே திருச்சி வந்த விஜய், தனி விமானம் மூலம் உடனடி​யாக சென்னை திரும்​பி​னார். பிரச்​சார கூட்​டத்​தில் திடீரென நெரிசல் ஏற்​பட்​டதற்​கான காரணம், பாதிக்​கப்​பட்​ட​வர்​களின் குடும்​பங்​களுக்கு செய்ய வேண்​டிய உதவி​கள், அவர்​களது குடும்​பத்​தினரை சந்​தித்து ஆறு​தல் கூறு​வது ஆகியவை தொடர்​பாக கட்சி நிர்​வாகி​களு​டன் விஜய் ஆலோ​சனை நடத்​தி​னார். இதையடுத்​து, உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை நேரில் சந்​தித்து ஆறு​தல்கூறு​வதற்​காக விஜய் மீண்​டும் கரூர் செல்ல அனு​மதி கேட்​டு, கட்​சித் தரப்​பில் காவல் துறை​யில் மனு கொடுக்​கப்பட உள்​ள​தாக​வும்கூறப்​படு​கிறது.

இதற்​கிடையே, விஜய் வெளி​யிட்டஅறிக்​கை: இதயம் நொறுங்​கிப் போய் இருக்​கிறேன். தாங்க முடி​யாத, வார்த்​தைகளால் சொல்ல முடி​யாத வேதனை​யிலும், துயரத்​தி​லும் உழன்று கொண்​டிருக்​கிறேன். நம் உறவு​களை இழந்து தவிக்​கும் பெருந்​துயர்​மிகு மனநிலை​யில், என் மனம் படு​கிற வேதனையை எப்​படி சொல்​வதென்றே தெரிய​வில்​லை.

கண்​களும், மனசும் கலங்​கித் தவிக்​கிறேன். நான் சந்​தித்த உங்​கள் எல்​லோருடைய முகங்​களும் என் மனதில் வந்து போகின்​றன. என் சொந்​தங்​களே, நம் உயிரனைய உறவு​களை இழந்து தவிக்​கும் உங்​களுக்​கு, சொல்​லொணா வேதனை​யுடன் ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக்​கொள்​ளும் அதே வேளை​யில், இந்த பெரும் சோகத்தை உங்​கள் மனதுக்கு நெருக்​க​மாக நின்று பகிர்ந்​து​கொள்​கிறேன்.

நமக்கு ஈடு​செய்​யவே இயலாத இழப்​பு​தான். யார் ஆறு​தல் சொன்​னாலும் நம் உறவு​களின் இழப்பை தாங்​கவே இயலாது. இருந்​தும், உங்​கள் குடும்​பத்​தில் ஒரு​வ​னாக, உறவை இழந்து தவிக்​கும் நம் சொந்​தங்​களின் குடும்​பம் ஒவ்​வொன்​றுக்​கும் தலா ரூ.20 லட்​ச​மும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரு​வோருக்கு தலா ரூ.2 லட்​ச​மும் அளிக்க எண்​ணுகிறேன். இழப்​புக்கு முன்​னால் இது ஒரு பெரும் தொகையன்​று​தான். ஆனாலும், இந்த நேரத்​தில், எனது உறவு​களான உங்​களு​டன் மனம்பற்றி நிற்க வேண்​டியது உங்​கள் குடும்​பத்தை சேர்ந்​தவ​னாக என் கடமை. அதே​போல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவு​களும் மிக விரை​வில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்​திக்​கிறேன். சிகிச்​சை​யில் இருக்​கும் நம் உறவு​கள் அனை​வருக்​கும் அனைத்து உதவி​களை​யும் தவெக உறு​தி​யாக செய்​யும். இறைவன் அருளால், அனைத்​தில் இருந்​தும் நாம் மீண்டு வர முயற்​சிப்​போம்​. இவ்​வாறு விஜய்​ தெரி​வித்​துள்​ளார்​.

இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தவெக மனு தாக்கல் செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் சந்திக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தவெக மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று மதியம் விசாரணைக்கு வர உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory