» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரேஷன் அரிசி கடத்திய 2பேர் கைது: வாகனம், 990 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

திங்கள் 29, செப்டம்பர் 2025 10:41:54 AM (IST)



கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்திய 2பேரை போலீசார் கைது செய்தனர். 990 கிலோ  ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மெயின் ரோட்டில் கிருஷ்ணன் கோவில் அருகே போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தபோது போலீசாரை பார்த்ததும் நிற்காமல் ஒரு மினி லோடு ஆட்டோ அதிவேகமாக சென்றள்ளது. இதனை பார்த்த போக்குவரத்து காவலர் அருண் விக்னேஷ், அந்த மினி லோடு ஆட்டோவை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து பார்த்த போது அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திக் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. 

இதையெடுத்து அவர் அந்த வாகனத்தில் வந்தவர்களை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் உக்கிரன் கோட்டையைச் சேர்ந்த முத்துக்குமார் (28), மானூர் மாவடியை சேர்ந்த மகாராஜா (36) என்பதும், 45 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory