» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கல்லிடைக்குறிச்சியில் சமூக நல்லிணக்க மீலாதுன் நபி விழா

திங்கள் 29, செப்டம்பர் 2025 8:31:18 AM (IST)



கல்லிடைக்குறிச்சியில் சமூக நல்லிணக்க மீலாதுன்நபி விழா, முதுபெரும் ஆலிம் கௌரவிப்பு விழா நடைபெற்றது. 

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் சமூக நல்லிணக்க மீலாதுன்நபி விழா, முதுபெரும் ஆலிம் கௌரவிப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லிடை நகர உலமாக்கள் அமைப்பின் சார்பில் கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசல் தெருவில் நடைபெற்ற இந்த விழாவுக்கு ஜமாத் தலைவர் கே.எஸ். அப்துல்மஜித் தலைமை வகித்தார். 

முஸ்லிம் ஜமாத் தலைவர்கள் அ. நாகூர்கனி, எஸ். ரசூல்மைதீன், எஸ்.எம். சாகுல்ஹமீது, எம். அப்துல் காதர், கே. ஒலிமாலிக், என். செய்யது மசூது ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹாபிழ் எம். அஹமது கபீர் கிராஅத் ஓதினார். ரஹ்மத் ஜும்மா பள்ளி தலைமை இமாம் எஸ். முகம்மது முஜம்மில் வரவேற்றார். கோடம்பாக்கம் மஸ்ஜிதே ரஹீமா பள்ளிவாசல் தலைமை இமாம் ஏ.எஸ். ஸதக்கத்துல்லாஹ் பாகவீ தொடக்கவுரை ஆற்றினார். 

விழாவில், 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆன்மிக பணி செய்து வரும் மூத்த ஆலிம் கே.எம். முஹம்மது மஸ்தானுக்கு, சென்னை கானாத்தூர் அல்ஹிதாயா அரபிக் கல்லூரி முதல்வர் நிறுவனர் எம். சதீதுத்தீன் பாஜில் பாகவீ, ஜமாத் தலைவர் கே.எஸ். அப்துல்மஜித் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்புரையாற்றினர். 

நீடுர் நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹூல் ஹூதா அரபிக் கல்லூரி துணை முதல்வர் கே.ஏ. முஹ்யீத்தீன் அப்துல்காதர், ஜமாத்துல் உலா சபையின் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் எஸ்.ஏ. ஷேக்மீரான், கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரர் கோயில் அறங்காவல் குழுத் தலைவர் வி. சங்கரநாராயணன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். 

விழாவில், கல்லிடைக்குறிச்சி நூருல்ஹிதாயா மகளிர் அரபிக் கல்லூரி முதல்வர் மு. ரஹ்மத் ரபீக், ஜமாத்துல் உலமா சபையின் அம்பாசமுத்திரம் வட்டாரத் தலைவர் ஓ.ஏ.முபாரக் அஹ்மது, செயலர் ஏ. மீரான் கனி, பொருளாளர் எம். ஜாஹிர்உசேன், ஜமாத் துணைத் தலைவர் ஷேக் மைதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

முன்னதாக பள்ளிவாசலில் துவா மஜ்லிஸ், நல்லிணக்க உறுதிமொழி எடுத்தல் ஆகியவை நடைபெற்றது. நிகழ்ச்சியை கல்லிடை நகர உலமாக்கள் அமைப்பின் தலைவர் அ. அபுபக்கர் சித்திக் தொகுத்து வழங்கினார். இமாம் எஸ். முகம்மது யாசீன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory