» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரூர் சம்பவம் எதிரொலியாக வழக்குப்பதிவு: புஸ்ஸி ஆனந்த் தலைமறைவு!

ஞாயிறு 28, செப்டம்பர் 2025 7:16:38 PM (IST)

கரூர் சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், த.வெ.க.  பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் நேற்று (செப். 27) இரவு கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மிக மோசமான நெரிசலில் 39 பேர் பலியானது மாநிலத்தையே உலுக்கியுள்ளது. பலியானர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதால் கரூரில் பெரும் சோகமே ஏற்பட்டுள்ளது. 

பல அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர். தற்போது, கரூர் காவல்துறை சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த், இணைச்செயலர் சி. டி. நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், புஸ்ஸி ஆனந்த் மற்றும் மதியழகன் எங்கிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் பிரச்னையின் தீவிரத்தால் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. கரூர் நெரிசல் பலிகளைத் தொடர்ந்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory