» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மக்கள் வயிறு நிறைய மாபெரும் புரட்சி செய்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன் - மு.க.ஸ்டாலின் புகழாரம்
சனி 27, செப்டம்பர் 2025 5:32:54 PM (IST)

நாட்டில் பெரும்பாலான மக்கள் பட்டினியில் வாடியபோது மக்களின் வயிறு நிறைய மாபெரும் புரட்சி செய்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை தரமணி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியதாவது; வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை இந்தியா என்றும் மறக்காது. வரலாற்றில் ஒரு சிலர் தான் பலகோடி பேர் மீது தாக்கம் செலுத்தும் வகையில் வாழ்ந்துள்ளனர்.
எம்.எஸ்.சுவாமிநாதன் அத்தகையவர். மிக எளிமையான வாழ்வை வாழ்ந்தவர். பலமுறை எம்.எஸ்.சுவாமிநாதனை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நாட்டில் பெரும்பாலான மக்கள் பட்டினியில் வாடியபோது மக்களின் வயிறு நிறைய மாபெரும் புரட்சி செய்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன். உணவு பாதுகாப்பின் காவலராகவும், குரலற்றவர்களின் குரலாக இருந்தவர்.
வறுமை ஒழிப்பை தனது குறிக்கோளாக கொண்டு செயல்பட்டவர். இந்திய பசுமை புரட்சியின் தந்தை என உலகமே அவரை அழைத்தாலும் நமக்கு அவர் உணவுத்துறையை பாதுகாத்தவர். எம்.எஸ்.சுவாமிநாதனின் கடமைகளையும் கனவுகளையும் நிறைவேற்றும் வகையில் வேளாண் மாணவர்கள், விஞ்ஞானிகள் பாடுபட வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அம்மன் கோவில்களில் சூரசம்ஹார விழா கோலாகலம் : திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 8:23:01 PM (IST)

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர்... முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 4:21:24 PM (IST)

மத்திய அரசு நிதி விடுவிப்பு: ஆர்டிஇ திட்டத்தில் நடைமுறைகள் தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு
வியாழன் 2, அக்டோபர் 2025 4:06:42 PM (IST)

கடலில் மூழ்கி தந்தை, 2 மகள்கள் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:50:14 PM (IST)

கொள்கை எதிரி: விஜய் எப்படி பாஜகவின் பிடியில் இருப்பார்? நயினார் நாகேந்திரன் கேள்வி!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:44:04 PM (IST)

விஜய் மீது வழக்குப்பதிய தமிழக அரசுக்கு அச்சமா? திருமாவளவன் கேள்வி!
வியாழன் 2, அக்டோபர் 2025 12:41:45 PM (IST)
