» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் தசரா திருவிழா கோலாகலம் : வேடம் அணிந்த பக்தர்கள் வீதி உலா!

சனி 27, செப்டம்பர் 2025 12:44:50 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் தசரா விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வேடமணிந்த பக்தர்கள் வீதி, வீதியாக சென்று காணிக்கை வசூல் செய்கின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு தினம் தோறும் அம்மன் சிறப்பு அலங்காரதுடன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 4-ம் திருவிழாவான நேற்று காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. 

தசரா திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். இந்த பக்தர்கள் கோவிலில் இலவசமாக வழங்கப்பட்ட மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பை வலது கையில் கட்டிக் கொண்டு, தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர், ஊராக வீதி, வீதியாக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர். அவர்களிடம் பொதுமக்களும் ஆர்வத்துடன் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர்.



தூத்துக்குடி திருவிக நகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் தசரா விழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.  விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory