» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மறைந்த தலைவர்களின் புகழை இழிவுபடுத்தும் பேச்சு: சீமானுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!

சனி 27, செப்டம்பர் 2025 10:47:17 AM (IST)

மறைந்த தலைவர்களின் புகழை இழிவு படுத்தும் நோக்கில் வன்மத்தோடு பேசுவது துளியும் அரசியல் நாகரிகமற்ற செயல் என சீமானுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "மேடைகளில் சமத்துவம் கண்ட, அனைவருக்கும் அனைத்தும் வழங்கும் சமதர்ம திராவிட அரசியலை தமிழ்நாட்டின் நிர்வாக அரசியலாகக் கட்டமைத்த பேரறிஞர் அண்ணா அவர்களையும், அண்ணா வழி திராவிடம் எனும் உயரிய நோக்கில் அதிமுகவை நிறுவி, உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பிற்குரிய தலைவராக, மேதகு பிரபாகரனுக்கும் தலைவராக விளங்கிய நம் புரட்சித்தலைவர் எம்ஜிஆரையும்,

மறைந்த தலைவர்களின் புகழை இழிவு படுத்தும் நோக்கில் வன்மத்தோடு பேசுவது துளியும் அரசியல் நாகரிகமற்ற செயல். தமிழர்களுக்கே உரித்தான அறத்தை சீமான் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் கொள்கையை, வளர்ச்சியை செதுக்கிய ஒப்பாரும் மிக்காரும் அற்ற நம் தலைவர்கள் பற்றி அவதூறாகப் பேசியதை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

சிட்டிசன்Sep 27, 2025 - 05:33:33 PM | Posted IP 104.2*****

மறைந்த ஒருவரை பற்றி பேசுவதையே தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என்றால் தூத்துக்குடி யில் கார்ப்பரேட் கைக்கூலியாக செயல்பட்டு 13 உயிர்களை சுட்டு கொன்ற உங்களை மான தமிழர்கள் மன்னிப்பார்களா ?? கட்டாயம் மன்னிக்க மாட்டோம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory