» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் நான் அல்ல: விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் சாடல்!

வெள்ளி 26, செப்டம்பர் 2025 5:03:56 PM (IST)

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர் பேசியதாவது: நான் வெறும் சனிக்கிழமை சனிக்கிழமை மட்டும் வெளியே வரமாட்டேன். ஞாயிற்றுக்கிழமை கூட சுற்றிக்கொண்டுதான் இருப்பேன். இன்னைக்கு என்ன கிழமை என்று கூட தெரியாது. வெள்ளிக்கிழமையா.., நான் பல மாவட்டங்களுக்கு போகும்போது அங்கு மக்கள் கூட்டமாக நிற்பார்கள். மனுக்களுடன் நிற்பார்கள். தாய்மார்கள் நிற்பார்கள். நான் வண்டியை நிற்கச் சொல்லுவேன். 

நிறைய பேர் மனுக்குள் கொடுப்பார்கள். நிறைய பேர் பாராட்டுவார்கள். நிறைய பேர் வாழ்த்துவார்கள். தம்பி, அப்பாட்ட சொல்லிடுங்க.., 1000 ரூபாய் வந்திருச்சி. தேங்க்ஸ். அப்படி பேசி வாழ்த்தியிருக்காங்க. ஆயிரம் ரூபாய் எதற்கு பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டேன். 90 சதவீதம் பேர் மருத்துவ செலவிற்கு பயன்படுத்துகிறேன் என்பார்கள். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய், சனிக்கிழமை தோறும் இரண்டு மாவட்டங்கள் என சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். சனிக்கிழமை மட்டும் பிரசாரம் செய்தால் போதுமா? என மற்ற கட்சித் தலைவர்கள் விமர்சித்த நிலையில், கட்சி தொண்டர்களின் நலனிற்காகத்தான் சனிக்கிழமையை தேர்வு செய்தேன் என விஜய் பதில் கூறியிருந்தார். இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory